ஐபிஓ வரும் எல் அண்ட் டி டெக்னாலஜீஸ்...முதலீடு செய்யலாமா?

சோ. கார்த்திகேயன்

ல் அண்ட் டி டெக்னாலஜீஸ் சர்வீசஸ், வரும் செப்டம்பர் 12-ல் புதிய பங்கு விற்பனையில் (ஐபிஓ) களமிறங்குகிறது. இதில் முதலீடு செய்யலாமா என்பது குறித்து ‘கார்வி ஸ்டாக் புரோக்கிங்’ நிறுவனத்தின் துணைத் தலைவர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

‘‘எல் அண்ட் டி டெக்னாலஜீஸ் நிறுவனம்,    எல் அண்ட் டி நிறுவனத்திலிருந்து கடந்த 2010-ம் ஆண்டு பிரிக்கப்பட்டது. அப்போது எல் அண்ட் டி இன்டெக்ரேடட் இன்ஜினீயரிங் சர்வீசஸ் என்னும் பெயரில் இந்த நிறுவனம் செயல்பட்டது. அதன்பிறகு 2012-ம் ஆண்டு  எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.3,142 கோடியாக இருந்தது.

பொதுவாக, டெக்னாலஜி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நிலைமை தற்போது மோச மாக உள்ளது. இன்ஃபோசிஸ், டிசிஎஸ் போன்ற நிறுவனங்களின் செயல்பாடுகளும் மந்தநிலை       யிலேயே காணப்படுகின்றன. அதேசமயம், எல் அண்ட் டி டெக்னாலஜிஸைப் பொறுத்தவரை, அந்த நிறுவனத்தின் வணிகம் உறுதியாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்