கவின்கேர் காட்டும் பாதை... புதுமைக்கு மரியாதை!

மு.சா.கெளதமன்

புதுமை படைப்பது (Innovation)... இன்றைய தொழில் துறையை முன்னெடுத்துச் செல்லும் புதிய வார்த்தை இதுவாகத்தான்  இருக்கிறது. பல்வேறு துறைகளில் புதுமை படைப்பவர்களை ஆண்டுதோறும் தேடிக் கண்டுபிடித்து, ‘சின்னிகிருஷ்ணன் புதுமை விருது’ வழங்கி கெளரவித்து வருகிறது கவின்கேர் நிறுவனம். இந்த ஆண்டுக்கான இந்த விருது மூன்று சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் களாக பெப்ஸிகோ நிறுவனத்தின் இந்திய பிராந்தியத் தலைவர் டி.சிவகுமார், டைனி மேஜிக் நிறுவனத்தின் நிறுவனர் சுகுமார் ராஜகோபால், எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் சார்பாக டெர்ரி தாமஸ் ஆகியோர் கலந்து  கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முதலில் பேசிய கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.கே.ரங்கநாதன், ‘‘இன்று எல்லோராலும் பிசினஸ் தொடங்க முடியும். ஆனால் புதுமையாக ஏதாவது செய்தால்தான் பிசினஸில் நிற்க முடியும். என் தந்தை சின்னி கிருஷ்ணன் ஒரு கணித ஆசிரியர். அவர் பிசினஸை தொடங்கியபோது, அவரே வேதியியல் கூடத்தை நிறுவி, ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அவர் கண்டுபிடித்த சாஷே  தொழில் நுட்பம்தான் இன்றைக்கு எல்லா பொருட்களையும் எளிதாக விற்க பயன்படுகிறது. ‘சின்னிகிருஷ்ணன் புதுமை விருது’ வாங்கியவர்களில் பலர் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள்’’ என்றார்.

அவரைத் தொடர்ந்து மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷனின் (எம்.எம்.ஏ) தலைவர் ஆர்.ஸ்ரீகாந்த், “இன்றைய இந்தியாவின் வளர்ச்சியை நிர்ணயிப்பது புதுமைகளும், திறமைகளும்தான்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்