அறிமுகம்...ஆப்பிள் ஐபோன் 7 ஹைலைட்ஸ்!

வ்வொரு வருடமும் புதிய ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. இந்த வருடம் புதிதாக ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் ஆகியவற்றை சான்பிரான்சிஸ்கோவில் ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் அறிமுகம் செய்தார். 

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் - 32 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மாடலைப் பொறுத்து மாறுபடுகிறது. அமெரிக்காவில் ஐபோன் 7 குறைந்தபட்சம் 709 டாலரில் தொடங்கி, அதிகபட்சம் 849 டாலர் வரை விற்கப்படுகிறது. ஐபோன் 7 ப்ளஸ் 809 டாலரில் தொடங்கி, 949 டாலர் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன்  7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் முறையே 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச்  ரெட்டினா ஹெச்டி டிஸ்ப்ளேயுடன் கூடிய 3டி தொடுதிரை கொண்டுள்ளது. இது முன்பு வெளியான ஐபோன்களைவிட 25% கூடுதல் பிரைட்னஸ் கொண்டதாக உள்ளது.

இந்த போனை அறிமுகப்படுத்திப் பேசிய ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர் ஜான் ஐவி, இந்த போன் தரமாகவும் அழகாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக அதிக சிரத்தை எடுத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். ஐபோன்களிலேயே இதுதான் பெஸ்ட் என்பதைத் திரும்பத் திரும்ப சொல்லி இருக்கிறார் அவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்