நிஃப்டி எதிர்பார்ப்புகள்: கரடிகள் பலம் பெறுகிறதா?

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

பிராஃபிட் புக்கிங் வரக்கூடும் என்பதை எதிர்பார்த்தே வியாபாரம் செய்யவேண்டியிருக்கும் என்றும் பெரிய அளவிலான டேட்டா வெளியீடுகள் எதுவும் இல்லாத வாரம் என்பதால் செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையை எடுத்துச் செல்லும் என்றும் பிராஃபிட் புக்கிங்கிங் காரணமாக திடீர் வீக்னெஸ்கள் வந்துபோக வாய்ப்புள்ளன என்பதை நினைவில் வைத்தே வியாபாரம் செய்யவேண்டியிருக்கும் என்றும் சொல்லியிருந்தோம்.

நான்கு டிரேடிங் தினங்களைக் கொண்டிருந்த வாரத்தில் இரண்டு நாட்கள் ஏற்றத்திலும், இரண்டு நாட்கள் இறக்கத்திலும் முடிவடைந்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 57 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

8788 என்ற லெவலை உடைத்து வால்யூமுடன் கீழே சென்று மல்டிபிள் குளோஸானால் மட்டுமே பிராஃபிட் புக்கிங்கினால் வந்த இறக்கம் தொடரும் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.

அப்படி இறக்கம் வந்தாலுமே செய்திகள் நெகட்டிவ்வாக இல்லாத பட்சத்தில் அதிகபட்சமாக 8510 லெவல் வரை மட்டுமே சென்று திரும்பிவிட வாய்ப்புள்ளது.

டெக்னிக்கலாகப் பார்த்தால், கரடிகளின் பலம் சந்தையில் அதிகரித்துகொண்டு வருவதைப் போன்ற தோற்றமே இருக்கிறது. வரும் வாரத்தில் இந்திய இன்ஃப் ளேஷன் டேட்டா வெளிவர இருக்கிறது. அமெரிக்க மற்றும் இங்கிலாந்தின் இன்ஃப்ளேஷன் டேட்டாவும், இங்கிலாந்து நாட்டின் வட்டி விகித முடிவு களும் வெளிவர உள்ளன. இதற்கு ஏற்றாற்போலவே சந்தையின் நகர்வுகள் இருக்கும்.

எனவே, செய்திகளின் மீதும் நிகழ்வுகளின் மீதும் ஒரு கண் வைத்தே வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும். நல்ல ஃபண்டமென்டல் உள்ள ஸ்டாக்குகளில் மட்டுமே சிறிய எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்டான ஸ்டாப் லாஸுடன் லாங் சைட் வியாபாரத்துக்கு சந்தையை டிரேடர்கள் ட்ராக் செய்யலாம்.

வீக்னெஸ்  வந்தபோதிலுமே ஷார்ட் சைட் வியாபாரத்தைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல், ஓவர்நைட் பொசிஷனையும் தவிருங்கள். வாரத்தின் இறுதியில் மீண்டும் மேல் நோக்கிய மூவ்கள் வந்துவிடக்கூடும். கவனம் தேவை.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப் பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள் 09-09-16 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்