டிரேடர்களே உஷார் - 24

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நஷ்டம் இல்லாமல் டிரேடிங்!தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

ந்தியா, பக்கத்து ஃப்ளாட்டுக்குப் புதிதாகக் குடிவந்த கரீஷ்மாவைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார். சந்தியாவுக்குத் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. சொந்த வீடு - கணவர் சின்னதாக டிராவல்ஸ் ஒன்றை நடத்தி வருகிறார். ஒரு மகன் 10-ம் வகுப்பு படிக்கிறான். ஒரு இல்லத்தரசியாக வாழ்க்கை நன்றாகவே போய்க்கொண்டு இருந்தது சந்தியாவுக்கு. 
 
பக்கத்து வீட்டு கரீஷ்மா வடஇந்தியப் பெண். வயது 25.  காலையில் அழகாக டிரெஸ் பண்ணிக்கொண்டு, ஆக்டிவாவில் ஆபிஸ்க்குப் போவார். மாலையில் வீட்டுக்கு வந்தபிறகு, அவர் வீட்டில் மெலிதாக இந்திப் பாட்டுகள் கேட்கும். இவர் எங்கே வேலை பார்க்கிறார், ஏன், இங்க தனியாக இருக்கார் என்று பல கேள்விகள், சந்தியாவின் மண்டைக்குள் குடைந்தன.

அந்த ஞாயிற்றுக்கிழமை கரீஷ்மா, கடைக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில், சந்தியா பிடித்துக்கொண்டார். ‘‘என் பெயர் சந்தியாங்க...” என அறிமுகம் செய்துகொண்டார். 

“என் பேர் கரீஷ்மா, சொல்லுங்க...” என்றார். அதற்குள் வீடு வர, கரீஷ்மா, சந்தியாவை வீட்டுக்குள் அழைத்தார். சந்தியா சோபாவில் உட்கார்ந்து, வீட்டை ஒரு நோட்டம் விட்டுத் திரும்பும் போது, அங்கு கரீஷ்மா கையில் கூல் ட்ரிங்ஸுடன் நின்றுகொண்டு இருந்தார்.

“குடிங்க சந்தியா. என்ன வீடு நல்ல இருக்கா?”

‘‘வீட்டை சூப்பரா வைச்சிருக்கீங்க. கரீஷ்மா, நீங்க நார்த் இண்டியன் மாதிரி இருக்கீங்க. ஆனா, தமிழ் நல்லா பேசறீங்களே!”

“அப்படியா? நாங்க பாம்பேல இருக்கோம். எங்க அப்பா மஹாராஷ்டிரா, அம்மா தமிழ்நாடு. அப்பா, பாம்பேல பேங்ல வேலை பார்க்கிறார். நான் ஒரு புரோக்கிங் கம்பெனியில வேலை செய்றேன். என்னை சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணி இருக்காங்க.”

“ஏதோ புரோக்கர் ஆபிஸ்ல வேலை பார்க்கிறதா சொன்னீங்களே, அது என்ன புரோக்கர் ஆபிஸ்..?”

“அதுவா, ஷேர் மார்க்கெட் வியாபாரம். எங்க கஸ்டமருக்குத் தேவையான ஷேரை வாங்கி, வித்துக் கொடுப்போம்.”

ஷேர் மார்க்கெட் என்றவுடன், சந்தியாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. ஷேர் மார்க்கெட் பத்தித் தெரிந்துகொள்ளவேண்டும் என்று கணவரிடம் கேட்டுப் பார்த்தார். ‘உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை’ என ஒதுக்கிவிட்டார். இப்போது கரீஷ்மாவைப் பார்த்தவுடன்,  ஷேர் மார்க்கெட் பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததுபோல் உணர்ந்தார். மெள்ள தன் சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தார்.

“ஷேர் மார்க்கெட் பத்தி தெரிஞ்சிக்க எனக்கு ஆர்வம். ஆனால், யாரைக் கேட்கிறதுன்னு தெரியல. ஷேர் மார்க்கெட் நல்லதா கெட்டதா?”

கரீஷ்மா சந்தியாவுக்கு நம்பிக்கை ஊட்டினார். ‘‘உங்களுக்கு நான் டீடெய்லா சொல்றேன். உங்க கணவர் என்ன பண்றார்..?”

“டிராவல்ஸ் நடத்தறார்.”

‘‘உங்க கணவர் பண்ற பிசினஸை இன்னும் விரிவாக்க நினைக்கிறார்னு வச்சிப்போம். அதுக்கு நீங்க பணம் கொடுத்து உதவி செய்தா, நீங்க அதுல ஒரு ஷேர் ஹோல்டர்!” 

‘‘அப்பவும் அவர்தானே ஓனர்!”

“கரெக்ட். நிர்வாக ரீதியா அவர்தான் ஓனர். ஆனா, நீங்க எவ்வளவு காசு கொடுத்து இருக்கீங்களோ அந்த அளவுக்கு உங்களுக்கும் அந்த கம்பெனியில உரிமை இருக்கு. ஒவ்வொரு வருஷ முடிவிலும், வியாபாரத்தைக் கணக்குப் பார்த்து, வர்ற லாபத்திலே, நீங்க காசு போட்ட அளவுக்கு லாபத்தைப் பிரிச்சிக் கொடுப்பதாக வைச்சுக்கலாம்.”

“ஆனா... அவர் கொடுக்க மாட்டரே.”

கரீமாவுக்கு சிரிப்பு வந்தது.  இருந்தாலும் அதை மறைத்துகொண்டு தொடர்ந்து பேசினார்.

“பரவாயில்லை. பங்குச் சந்தையைப்  புரிஞ்சிக்கிறதுக்காக அவர் பிரிச்சுக் குடுக்குறார்னே வச்சுக்கலாம். வருஷத்துக்கு வருஷம், உங்க கணவரோட டிராவல்ஸ்ல லாபம் கூடி, இன்னும் நிறைய கார் வாங்கி நடத்தும்போது, நீங்க போட்ட காசோட சேர்த்து லாபமும் சேர்ந்து மதிப்பும் கூடும். அதாவது, நீங்க முதல்ல ஒரு லட்சம் போட்டிருந்தா, 3-4 வருஷம் கழித்து, அது இரண்டு லட்சம் இல்ல, மூணு லட்சமாக்கூட மாறலாம். புரியுதுங்களா சந்தியா..?”

“புரியதுங்க, இதுக்கும் ஷேர் மார்க்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்..?”

“பாயின்டுக்கு வந்தீட்டீங்க. இப்ப நீங்க பணம் போடறது, உங்க கணவரோட கம்பெனி இல்ல. வேற ஒரு கம்பெனி அப்படின்னு வைச்சுப்போம்.    அதில நீங்க ரூ.1,000 பணம் போடும்போது, ஒரு ஷேர் ரூ.10 அப்படின்னு கணக்குப் போட்டு, உங்களுக்கு 100 ஷேர் கொடுப்பாங்க. இது புரியுதா?”

“புரியுது கரீஷ்மா, அந்த கம்பெனி வருஷத்துக்கு வருஷம் லாபம் கூடினா, இந்த ஷேர் விலை ரூ.10-ல இருந்து ரூ.15 - 20 அப்படின்னு கூடிக்கொண்டே போகும்.”

“சரியா சொன்னீங்க சந்தியா. இப்படித்தான் நல்ல கம்பெனிகளைத் தேர்வு பண்ணி அதில முதலீடு செய்யணும். அப்புறம் நல்ல லாபம் வரும்போது விற்று வெளியே எடுக்கணும்.”

“ஆனா கரீஷ்மா, ஷேரை காலையில வாங்கி சாயந்திரம் வித்து லாபம் பார்க்கிறாங்களே, அது எப்படி..?”

“நல்ல கேள்வி கேட்டீங்க சந்தியா? இதுவரைக்கும் நான் சொன்னது முதலீடு, அதாவது இன்வெஸ்ட்மென்ட். இதுகூட நீங்க வாங்க, விற்க ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் வழியாதான் பண்ணுவீங்க.”

“ஸ்டாக்  எக்ஸ்சேஞ்சுனா?”

“அது ஒரு மார்க்கெட். எப்படி காய்கறி விக்கிறவங்களும் வாங்கறவங்களும் கூடற இடத்தை, காய்கறி மார்க்கெட்ன்னு சொல்றோமோ, அந்த மாதிரி ஷேர் வாங்கி விக்கிற இடத்தை ஷேர் மார்க்கெட்ன்னு சொல்வாங்க. ஷேருக்கு இன்னொரு பெயர் ஸ்டாக். ஒருத்தர் கையில இருந்து இன்னொருத்தர் கைக்கு ஸ்டாக் மாறுவதால, இதை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுனு சொல்லுவாங்க. இது எலெக்ட்ரானிக் முறையில செயல்படுவதால, நாம சினிமா டிக்கெட், ரயில் டிக்கெட் புக் பண்ற மாதிரி சுலபமா பண்ணலாம்; கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் இருந்தா ஷேரே வாங்கலாம், விற்கலாம்.”

“கரீஷ்மா, நீங்க இன்னும் காலையில வாங்கி, சாயந்திரம் வித்து லாபம் சம்பாதிப்பதைப் பத்தி சொல்லவே இல்லையே..?”

“அதையும் சொல்றேன். இன்வெஸ்ட்மென்ட் என்கிறது அவங்க வேலையை பாதிக்காம செய்றது. ஆனா, இப்ப நீங்க கேட்ட காலையில வாங்கி உடனே விக்கிறது என்பது டிரேடிங் அப்படின்னு சொல்லுவோம். காலை ஒரு ஷேர் விலை ஏறும்னு நம்பி நீங்க வாங்னீங்கன்ன அது டிரேடிங். உதாரணமா, எஸ்பிஐ ஷேர் ரூ.252 என்ற விலையில் இருந்து ஏறும்னு நம்பினா வாங்கலாம். நாம் எதிர்பார்த்தபடியே 253, 254, 255 அப்படின்னு ஏறினா வித்து லாபம் எடுக்கலாம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்