எரிபொருள் விலையை உயர்த்தி ஏழைகளை இம்சிக்காதீர்கள்!

ஹலோ வாசகர்களே..!

மீண்டும் ஒரு முறை பெட்ரோல் விலையை உயர்த்தி நடுத்தர மக்களின் கோபத்துக்கு உள்ளாகி இருக்கிறது மத்திய அரசாங்கம். டீசல் விலையை ஒரு லிட்டருக்கு 31 காசு குறைத்திருந்தாலும், பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு 58 காசு உயர்த்தி இருக்கிறது.  சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துவரும் நிலையில், நம் நாட்டில் பெட்ரோல் விலையை மத்திய அரசாங்கம் உயர்த்தி வருவது விநோதமான விஷயம்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்துவருவதால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை அதிக விலை தந்து வாங்க வேண்டியிருக்கிறது. எனவேதான் இந்த விலையேற்றம் என அரசுத் தரப்பில் காரணம் சொல்லப்படுகிறது. தவிர, பெட்ரோல் மற்றும் டீசலின் பயன்பாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இந்த பயன்பாட்டைக் குறைக்கவும் மத்திய அரசு விலையேற்றிருக்கலாம்.

ஆனால், எரிபொருட்களின் விலை சிறிதளவு உயர்த்தப்பட்டாலும் அதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வில் பாரதூரமான மாற்றங்கள் ஏற்படும் என்பதை மத்திய அரசாங்கம் மறந்துவிடக் கூடாது. எரிபொருட்களின் விலை ஓரளவு குறைவாக இருந்ததன் விளைவாகவே, சமீப காலத்தில் பணவீக்கமும் கட்டுப்பாட்டில் இருந்தது. இனி எரிபொருட்களின் விலை நினைத்த போதெல்லாம் உயர்த்தப்படுமானால், விலைவாசி இன்னும் கடுமையாக அதிகரித்து, நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பெரும் துன்பத்தை ஏற்படுத்திவிடும். இதனால் மக்களின் வெறுப்பை மத்திய அரசு சம்பாதிக்க  வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்