ஐசிஐசிஐ புரூ. லைஃப் இன்ஷூரன்ஸ் - ஐபிஓ-வில் முதலீடு செய்யலாமா?

பு.விவேக் ஆனந்த்

ந்தியாவில் முதல்முறையாக பங்குச் சந்தையில் களமிறங்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் என்கிற பெருமையுடனும் பெரிய எதிர்பார்ப்புடனும் வந்திருக்கிறது ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ.    

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஐசிஐசிஐ பேங்க் 67.52 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கிறது. புரூடென்ஷியல் நிறுவனம் 25.83% பங்குகளை வைத்திருக்கிறது.

இந்த மாதம் 19-ம் தேதி, திங்கள்கிழமை தொடங்கி செப்டம்பர் 21-ம் தேதி வரை ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் பங்குகள் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.10 முக மதிப்புக் கொண்ட பங்கின் விலைப் பட்டை ரூ.300 முதல் ரூ.334-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய பங்கு வெளியீட்டில் 12.63 சதவிகிதப் பங்குகள் (சுமார் 18.13 கோடி) விற்பனை செய்யப்படுகிறது. இதில் 19 சதவிகிதம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் 25 சதவிகிதப் பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

இந்த ஐபிஓவில் பங்குகளை வாங்கவேண்டும் எனில், குறைந்தபட்சம் 44 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு 44-ன் மடங்குகளில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பங்கு விற்பனைக்குப் பிறகு ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் பங்கு மூலதனம் 54.89 சதவிகிதமாகக் குறையும். ஆனால், புரூடென்ஷியல் நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் எந்த மாற்றமும் இருக்காது.

இந்த பங்கு வெளியீட்டின் மூலம் மொத்தம் ரூ.6,000 கோடி திரட்டப்படு கிறது. ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனம் பங்கு வெளியீட்டின் மூலம் இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டுவது இதுவே முதல் முறை.

ஐசிஐசிஐ புரூ. லைஃப் ஐபிஓ-வில் முதலீடு செய்யலாமா என ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ரிசர்ச் ஹெட்   ஏ.கே பிராபகரிடம் கேட்டோம். நம் கேள்விக்கு விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.

“இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 2.5 - 2.8% மக்கள் மட்டுமே ஆயுள் காப்பீடு எடுத்திருக்கிறார்கள். இந்தியா போன்ற பெரிய நாட்டில் இந்த சதவிகிதம் வரும் ஆண்டுகளில் அபரிமிதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்