பங்கு Vs மியூச்சுவல் ஃபண்ட்... டிவிடெண்ட் டிப்ஸ்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

ந்திய  நிறுவனங்கள், லாபத்தில்   வழங்கும் டிவிடெண்டுக்கு வரி ஏதும் இல்லை. கூடுதல் வருமானம், மூலதன அதிகரிப்பு (கேப்பிட்டல் அப்ரிசியேஷன்) மூலமாகத்தான் கிடைக்கும். பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளை ஓராண்டுக்கு மேல் வைத்திருந்தால்,  கிடைக்கும் மூலதன அதிகரிப்புக்கு வரி ஏதும் இல்லை. இந்த ஆண்டு முதல், ஆண்டுக்கு        ரூ.10 லட்சத்துக்கு மேல் பங்குகளில் இருந்து கிடைக்கும் டிவிடெண்டுக்கு 10% வருமான வரி செலுத்த வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில், தாங்கள் முதலீடு செய்த பங்குகளில் இருந்து ஈட்டிய லாபத்தில் ஒரு பகுதியை முதலீட்டாளர்களுக்கும் டிவிடெண்டாக குறிப்பிட்ட இடை வெளிகளில் பிரித்துத் தருகிறார்கள்.  இவ்வாறு தரும் ஃபண்டுகள், பங்குகளில் இருந்து கிடைக்கும் டிவிடெண்ட் யீல்டை மட்டுமல்ல, அந்தப் பங்குகளிலிருந்து கிடைக்கும் மூலதன அதிகரிப்பின் (பங்கு விலை உயர்வு) பெரும் பகுதியையும் டிவிடெண்டாக பிரித்து வழங்கி விடுகின்றன. ஆகவேதான் டிவிடெண்ட் வழங்கும் ஃபண்டுகளில் முதலீட்டின் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து கிடைக்கும் டிவிடெண்ட் அனைத்தும் டாக்ஸ் ஃப்ரீதான். பங்குகளில் ரூ. 10 லட்சத்துக்கு மேல் கிடைக்கும் டிவிடெண்டுக்கு 10% வரி கட்ட வேண்டும் என்பது போல் இங்கு கிடையாது. இது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

பங்கு மற்றும் ஃபண்டுகளில் முகமதிப்புக்குத்தான் டிவிடெண்ட் தருவார்கள் என்பதை முதலீட்டாளர்கள் மனதில்கொள்வது அவசியம். நிறுவனங்கள் மற்றும் ஃபண்டுகளுக்கு முக மதிப்பு வெவ்வேறாக இருப்பதால், டிவிடெண்ட் சதவிகிதத்தில் அறிவிக்கும்போது முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு தொகை டிவிடெண்ட் கிடைக்கும் என்பது வெளிப்படையாகத் தெரிவதில்லை. இதனால், முதலீட்டாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

இதனைத் தவிர்க்கும் விதமாக டிவிடெண்ட் தொகையை ரூபாயில் அறிவிக்க வேண்டும் என்பதை செபி அமைப்பு கட்டாயமாக்கி இருக்கிறது. இனி ஃபண்ட் முதலீட்டில் கிடைக்கும் டிவிடெண்ட்டை தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்