மியூச்சுவல் ஃபண்ட்... ஒரு சூப்பர் மார்க்கெட்!

எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர், Wmsplanners.com

மியூச்சுவல் ஃபண்ட் என்றாலே அது வெறும் ஷேர் மார்க்கெட்  மட்டுமே எனத் தவறாக நினைக் கின்றனர். உண்மையில் மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு சூப்பர் மார்க்கெட் மாதிரி. சூப்பர் மார்க்கெட்டில் குண்டூசி முதல் மளிகைப் பொருட்கள் வரை அனைத் துப் பொருட்களும் கிடைப்பது போல, மியூச்சுவல் ஃபண்டில் நம் எதிர்காலத் தேவைகள் அனைத்தை யும் நிறைவேற்றிக் கொள்கிற பற்பல திட்டங்கள்  உள்ளன.

மியூச்சுவல் ஃபண்டை மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல ஈக்விட்டி சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள், கடன் பத்திரங்கள் சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள் என இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். 

பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டை அதன் தன்மைக்கேற்ப மூன்று வகைகளாகப் பிரிக்கலாம், அவை, செக்டார் ஃபண்ட், ஈக்விட்டி டைவர்சிஃபைடு ஃபண்ட், பேலன்ஸ்டு ஃபண்ட் ஆகும்.

அதுபோல, கடன் சார்ந்த ஃபண்டை லாங் டேர்ம் ஃபண்ட் (10 ஆண்டுகளுக்கு மேல்), மீடியம் டேர்ம் ஃபண்ட் (3 முதல் 10 ஆண்டுகள்), சார்ட் டேர்ம் ஃபண்ட் என்று (3 ஆண்டுக்கும் குறைவான), அல்ட்ரா சார்ட் டேர்ம் ஃபண்ட் (90 நாட்களுக்கு குறைவான)  கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் ஃபண்டுகளும் உள்ளன.

ஒரு முதலீட்டாளரின் வயது, அவரது இலக்கு, அவரின் ரிஸ்க் எடுக்கும் தன்மைக்கேற்ப மேற்கண்ட ஃபண்டுகளைத் தேர்வு செய்து கொள்ளலாம். உதாரணமாக, குழந்தைகளின்  உயர்கல்வி மற்றும் ரிடையர்மென்ட் மற்றும் பிற நீண்ட கால (10 ஆண்டுகளுக்கு மேல்) தேவை களுக்கு ஈக்விட்டி டைவர்சிஃபைடு ஃபண்டைத் தேர்வு செய்யலாம்.  ஐந்து ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பணத் தேவைகளுக்கு பேலன்ஸ்ட் ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம். ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான தேவைகளுக்கு கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

வங்கிகளில் உள்ள சேமிப்புக் கணக்கைப் போல் எப்போது வேண்டுமானாலும் பணம் போடுவதற்கும் பணம் எடுப்பதற்கும் லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதற்கு நுழைவுக் கட்டணம் மற்றும் வெளியேறும் கட்டணம் எதுவும் கிடையாது. இதில் 7 முதல்
9% வரை வருமானம்  கிடைக்கக்கூடும்.

இந்த ஃபண்ட்களில் செல்போன் மூலம் முதலீடு செய்யும்விதமாக ஐசிஐசிஐ புரூ. மியூச்சுவல் ஃபண்ட் (ICICI - IPRU TOUCH), ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் (Reliance - Simply Save) போன்றவை இலவச ஆப்களை   வெளியிட்டுள்ளன.  இது முதலீட்டாளா்்களுக்கு மிகப் பெரிய வரப் பிரசாதம் ஆகும்.

அதுபோல ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு பணம் தேவை இல்லை என்பவர்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு பதிலாக கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். எஃப்.டி-யை விட இதில் கூடுதல் வட்டி கிடைக்க வாய்ப்புண்டு.  மியூச்சுவல் ஃபண்டில் பணவீக்க விகிதச் சரிக் கட்டல் சலுகை இருப்பதால் லாபத்துக்கு கட்டும் வரியிலும் சலுகை கிடைக்கும்.

இந்தியர்கள்ஒட்டுமொத்த சேமிப்பையும் வங்கி மற்றும் அஞ்சலக வங்கிகளில் முடக்கி விடுகின்றனர். தங்களின் சேமிப்பு, விலைவாசியைத் தாண்டி வளர்கிறதா என்பதைக் கவனிக்க தவறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், முதலீடு பற்றிய அறியாமை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஏற்படும் அச்சமே. 

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது மலையில் பயணிப்பது போல. ஏற்றங்களும் இறக்கங்களும் மாறி மாறி வரும். ஆனால், குறிப்பிட்ட காலத்தில் மலையின் உச்சியை அடைந்துவிடுவோம். கடந்த 20 வருடங்களில் மியூச்சுவல் ஃபண்ட் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளது. ஆனாலும், ஈக்விட்டி ஃபண்ட் சராசரியாக 20 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் தந்துள்ளது.

இனியாவது சேமிப்பின் ஒரு பகுதியை எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து லாபம் பெறுவோம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்