பில்லியனில் புரளும் ஸ்டார்ட் அப் குதிரைகள்!

சித்தார்த்தன் சுந்தரம்

ன்றைக்கு இந்தியத் தொழில் துறையில் அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தை `ஸ்டார்ட்அப்’. நமது பிரதமர் 2015-ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது ‘ஸ்டார்ட்அப் இண்டியா’ என்கிற  திட்டம் குறித்துப் பேசினார். ஆனால் அதற்கும் முன்பிருந்தே, ‘ஸ்டார்ட்அப்’ (தமிழில் இதை புதுமையான தொழில் முனைவு என்று சொல்லலாம்)’ என்பது நமது தொழில் துறையில், குறிப்பாக, இளைஞர்களிடையே ஒரு ஈர்ப்பு சக்தியாக செயல்பட்டு வருகிறது.

பிரபலமான மேலாண்மைக் கல்லூரிகளிலும், பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுரிகளிலும் படித்து வெளியேறும் மாணவர்கள் முன்புபோல எந்த நிறுவனம், எத்தனை லட்சம் சம்பளமாகக் கிடைக்கும் என்று காத்திருப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும் அதை நிராகரித்துவிட்டு, தங்களது ‘புதுமையான யோசனைகளைச்’ செயல்படுத்துவதில் கட்டுப்பாடுகள் ஏதுமில்லாத அல்லது  குறைவாக இருக்கக்கூடிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் சேர்ந்து, அந்த நிறுவனத்தோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் போக்கு சமீபகாலமாக வேகமாக வளர்ந்து வருகிறது.

ஸ்டார்ட்அப் தொழில்! 

நாஸ்காம் (NASSCOM) அமைப்பும் ஷின்னோவ் (Zinnov) நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் அறிக்கையின்படி, 2015-ம் ஆண்டின் இறுதி வரையிலான காலகட்டத்தில், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அமெரிக்கா, இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதன் வளர்ச்சி அதற்கு முந்தைய ஆண்டைவிட சுமார் 40% அதிகம். 

இ-காமர்ஸ் 15%, நுகர்வோர் சேவை 12%, ஓலா, உபர், ஸோமாட்டோ (Zomato) போன்ற தொகுப்பாளர்கள் 11%, எண்டர்பிரைஸ் சாஃப்ட்வேர் 8%, ஹைப்பர் லோக்கல் இ-காமர்ஸ் 8%, உடல்நலம் சார்ந்தவை 6%, கல்வி  சார்ந்தவை 8%, பகுப்பாய்வு (அனலிடிக்ஸ்) 5%, இ-காமர்ஸுக்கு ஆதரவளிப்பவை 5%, சமூகம் சம்பந்தப்பட்டவை 5%, மற்றவை (ad-tech, media-tech, payment) 17% என ஹைடெக் துறைகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

2011-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டு வரை இந்தத் துறை எவ்வளவு முதலீட்டைப் பெற்றிருக்கிறது என்று பார்த்தால், பெங்களூருவில் 2516 மில்லியன் டாலரும், மும்பையில் 2017 மில்லியன் டாலரும் முதலீடாகி உள்ளது. (பார்க்க அட்டவணை) 
 
இந்தியாவின் யுனிகார்ன்கள் (Unicorns)!

இன்றைய தேதி வரை இந்தியாவில் 11 நிறுவனங்கள் `யுனிகார்ன்’ அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் (உதாரணமாக, அது சார்ந்த துறை, அந்தத் துறையின் வளர்ச்சி, நுகர்வோர் எண்ணிக்கை, புதுமை, நிறுவன செயல்பாடு போன்றவை) மதிப்பீடு செய்யப்படு கின்றன. ஒரு பில்லியன் டாலர் (சுமார் ரூ.6,700 கோடி) மதிப்பீட்டைத் தாண்டிய நிறுவனம் ‘யுனிகார்ன்’ என அழைக்கப்படுகிறது. (பார்க்க அட்டவணை)

மில்லியனிலும் பில்லியனிலும் புரளும் இந்த நிறுவனங்கள் இப்போதைக்கு லாபம் அடையா விட்டாலும், இனிவரும் நாட்களில் லாபம் ஈட்டும் என்கிற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் மொய்த்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்