நாணயம் லைப்ரரி: வேகத்தடைகளைச் சமாளிக்கும் வெற்றி சூட்சுமங்கள்!

புத்தகத்தின் பெயர் : ரெடி ஃபார் எனிதிங் (Ready For Any thing)

ஆசிரியர் : டேவிட் ஆலென் (David Allen)

பதிப்பாளர் : Little Brown Book Group

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துவது, டேவிட் ஆலென் எழுதிய ‘ரெடி ஃபார் எனிதிங்’ எனும் தனிமனித உற்பத்தித்திறன் அதிகரிப்பதற்கு உதவும் 52 வழிவகைகளைச் சொல்லும் புத்தகத்தை.

அதிகப்பட்ச உற்பத்தித்திறன் என்றால் என்ன? குறைந்த அளவு முயற்சியில் இலகுவாக அதிக வேலைகளைச் செய்வது என்பதுதானே!

ஒரு செயலைச் செய்யும்போது வரும் இடையூறுகள், தடைகள் மற்றும் கவனச் சிதறல்கள் போன்றவற்றை எவ்வாறு எதிர்கொண்டு கையாளுகிறோமோ, அதை வைத்தே உற்பத்தித்திறன் அதிகரிப்பு என்பது நடக்கிறது. குறிப்பாகச் சொன்னால், நாம் நினைத்ததைச் செய்ய முயன்று அதை நோக்கிப் பயணிக்கும்போது அந்தப் பயணத்தின் வேகத்தைக் குறைக்கும் வேகத்தடைகளைச் சமாளிக்கும் விதமே நம்முடைய பயணத்தின் வேகத்தைத் தீர்மானிக்கிறது.

நாம் வாழும் இன்றைய உலகத்தில் குறிக்கோளுடன் நடக்கும் ஒரு செயல்ரீதியான பயணத்தில் நாம் எதற்கும் தயாரான நிலையிலேயே இருக்க வேண்டியுள்ளது.  எது நடந்தாலும் நம்முடைய செயல்பயணத்தில் நாம் முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற நிலையை அடைய பல சூட்சுமங்கள்  தேவைப்படுகின்றன. அந்தச் சூட்சுமங்களை அறிந்துகொண்டால் மட்டுமே, எந்தவிதமான நிகழ்வை எதிர்கொள்ளும்போதும் தகவல்களைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல் படவும், எண்ணத்தையும் உணர்ச்சிகளையும் சரியாகக் கையாளவும், அடைய வேண்டிய முடிவை நோக்கிச் செல்வதில் குறியாக இருக்கவும், எந்தவொரு சூழ்நிலையிலும் நாம் எடுக்கும் முடிவு குறித்து நம் மனதினுள் அதிகபட்ச நம்பிக்கை கொண்டிருக்கவும் முடியும்.

பொதுவாக, நாம் எந்தச் செயலிலும் ஈடுபடும் போது எதிர்காலத்தில் வருவதை எண்ணிப்பார்த்தும் எதிர்பார்த்தும் தயாராக இருக்கவேண்டியிருக்கும். எதிர்காலத்தில் நல்லதும் வரலாம், கெட்டதும் வரலாம். நாம் தெளிவின்றிக் காலம் கடத்தி ஏக குழப்பத்தில் ஒரு செயலைச் செய்து வருவோமேயானால் திடீரென ஒரு கெட்ட விஷயத்தை எதிர்கொண்டால் என்னவாகும்? மொத்தக் காரியமும் கெட்டுப்போகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்