25 வயது, 20,000 சம்பளம்... 60 வயது, ரூ.1.38 கோடி..! - பிஎஃப் ரகசியம்

சி.சரவணன்

ணியாளர்களின் ஓய்வுக்காலத்துக்காக அவர்களின் அடிப்படை சம்பளம் (Basic Salary) மற்றும் பஞ்ச படியில் (DA) மாதம்தோறும் 12% பிடிக்கப்படும் தொகைதான் இபிஎஃப் என்று அழைக்கப்படும் எம்பிளாயிஸ் பிராவிடென்ட் ஃபண்ட். இதற்கு தற்போது ஆண்டுக்கு 8.80% வட்டி தரப்படுகிறது. (இந்த வட்டி மத்திய அரசின் முடிவைப் பொறுத்து மாறுபடும்.)

இபிஎஃப் முதலீட்டின் மூலம் ஒருவர் தனது ஓய்வுக் காலத்தில் கணிசமான தொகையைப் பெறமுடியும். (பார்க்க கீழே உள்ள படம்!) இது தெரியாமல் இபிஎஃப்-ல் உள்ள பணத்தை பலரும் நடுவிலேயே எடுத்துவிடுகிறார்கள். அல்லது வேறு நிறுவனத்துக்கு வேலை மாறும்போது இபிஎஃப்-ல் இருக்கும் பணத்தை எடுத்து செலவு செய்து விடுகிறார்கள்.  

ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தை இபிஎஃப் முதலீடு மூலம் எப்படி பெறமுடியும் என்று பார்ப்போம். ஒருவர் 25 வயதில் வேலைக்கு சேருகிறார். அவருக்கு மாதச் சம்பளம் (அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி சேர்த்து) ரூ.20,000 கிடைக்கிறது. அவருக்கு ஆண்டுக்கு 5%  சம்பளம் உயருகிறது.  இவர் இபிஎஃப்-ல் தொகையை இடையில் எடுக்காமல் இருந்தால், அதற்கு ஆண்டுக்கு  சராசரியாக 8.5% வட்டி கிடைக்கும். அதன் மூலம் 60 வயதில் அவர் பணி ஒய்வுபெறும்போது அவருக்கு சுமார் ரூ.1.38 கோடி கிடைக்கும். ஆண்டு தோறும் சேரும் முதலீட்டுக்கான  வட்டி-க்கு வட்டி போட்டுத் தருவதால், இபி.எஃப்-ல் நாம் முதலீடு செய்த பணம் பல மடங்காகப் பெருகுகிறது.  

இப்படிக் கிடைக்கும் பணத்துக்கு  வருமான வரி எதுவும் கட்டத் தேவை இல்லை என்பது கூடுதல் சலுகை. இனி உங்கள் பிஎஃப் பணத்தை இடையில் எடுக்கமாட்டீர்கள்தானே?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick