கம்பெனி ஸ்கேன்: ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ்!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேன் செய்ய எடுத்துக் கொண்டுள்ள நிறுவனம் ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ் லிமிடெட். இன்றைக்கு சொட்டு நீர்ப் பாசனம், ஸ்ப்ரிங்க்லர் (தெளிப்பான்) மூலம் நடக்கும் பாசனம், பிவிசி பைப்பிங் சிஸ்டம்ஸ், ஹெச்டிபிஇ பைப்பிங் சிஸ்டம்ஸ், பிளம்பிங் சிஸ்டம்ஸ், எக்செல் பிவிசி ஷீட்டுகள், உணவு பதனிடுதல், தாவரங்களுக்கான டிஷ்யூ கல்ச்சர் பிளான்ட்டுகள், க்ரீன் ஹவுஸ்கள், சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்தி, திரவங்கள் மற்றும் கேஸ்கள் கொண்டு செல்வதற்கான பைப்கள் நிறுவுவதற்கான  டர்ன் – கீ-புராஜெக்ட்கள், இந்த செயல்பாடுகளில் விற்பனைக்கு பிந்தைய சேவைகளை வழங்குதல் என பல்வேறு தொழில்களில் கால்பதித்திருக்கிறது.

ஆரம்பத்தில் மைக்ரோ இரிகேஷன் (சொட்டு நீர்ப் பாசனம்) என்ற துறையில் ஒரு முன்னோடியான நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு பெரிய அளவில் வளர்ச்சி கண்ட நிறுவனம் என்பதால், இதன் பெயரில் ‘இரிகேஷன் சிஸ்டம்ஸ்’ என்ற வாசகம் இருக்கிறது. இதன் நிறுவனர் பாவர்லால் ஹெச் ஜெயின் என்பவர்  1963-ம் ஆண்டில்  விவசாயத்துக்குத் தேவையான இடுபொருட்கள் மற்றும் உபகரணங்களை வாங்கி விற்கும் ஒரு டிரேடிங் நிறுவனத்தைத் துவங்கினார்.

1980-ம் ஆண்டு  பிவிசி பைப்புகள் எக்ஸ்ட்ரூஷன் பிளான்ட்டை நிறுவிய அவர், 1988-ம் ஆண்டு சொட்டு நீர்ப் பாசனத் துறையில் முன்னோடியாக கால்பதித்து செயல்பட ஆரம்பித்தார். மனிதனுக்கு  தண்ணீர் ஒரு அதிமுக்கியமான மற்றும் இன்றியமையாத விஷயம். இதனாலேயே சிறு விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை தண்ணீரை சிக்கனமாக உபயோகிக்கும் வரைமுறை களையும் அதற்கான உபகரணங்களையும் தன்னுடைய உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி வசதிகளின் மூலம் கண்டறிந்து வழங்கி வருகிறது இந்த நிறுவனம்.

  ஒவ்வொரு சொட்டு நீருக்கும் அதிக மகசூல் என்பது இந்த நிறுவனத்தின் குறிக்கோளாக இருக்கிறது. இப்படி தண்ணீரை சிக்கனமாக செலவழிப்பதன் மூலம் தண்ணீர் மற்றும் உணவு என்பதில் தன்னிறைவு அடைய முடியும்  என்கிறது இந்த நிறுவனம். 

இன்றைக்கு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான குழுமரீதியான வர்த்தகத்தைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். உலக அளவில், நான்கு கண்டங்களில்  30  தொழிற்சாலைகளைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், 126 நாடுகளில்  6,700 டீலர்கள் மூலம்  தன்னுடைய தயாரிப்புகளை விநியோகித்து வருகிறது. இன்றைக்கு 4.5 மில்லியன் விவசாயி களை வாடிக்கையாளர்களாகக் கொண்டு இருக்கிறது.

உலக அளவில் மிகப் பெரியதொரு சொட்டு நீர்ப்பாசனத்துக்கான உபகரணங்களை உற்பத்தி செய்துவருவதுடன், சொட்டு நீர்ப்பாசன வசதிகளைச் செய்து தருவதில் மண் பரிசோதனை யில் ஆரம்பித்து பாசன வசதிக்கான  என்ஜினியரிங் டிசைன்கள் வழங்குதல் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்துக்கு ஒத்த சேவைகள் அளிப்பது வரை அனைத்தையும் வழங்குகிறது இந்த நிறுவனம்.

சொட்டு நீர்ப்பாசனப் பிரிவு

சொட்டு நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதில் உதவும் உமிழும் குழாய்கள்,  ட்ரிப் டேப் எனப்படும் வேண்டும்போது மடக்கக்கூடிய குழாய் வகைகள்,  கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் வெயிலில் நீடித்து உழைக்கக்கூடிய ஹோஸ்கள், எக்ஸ்டென்ஷன் ட்யூப்கள், வினைல் ட்யூப்கள் போன்ற பலவகை ட்யூப்கள், ஒவ்வொரு பயிர் வகைக்கும் தேவையான மற்றும் வெவ்வேறு மண்வகைகளிலும் பயன்படக்கூடிய அளவிலான  தெளிப்பான்கள் (ட்ரிப்பர்ஸ்), மின்சார வசதி இல்லாத சிறு விவசாயிகளுக்கு உதவும் வகையிலான புவி ஈர்ப்பு விசையிலேயே இயங்கக்கூடிய  அளவில் டிசைன் செய்யப்பட்ட ட்ராப் கிட்கள், சிறு துளைகளின் வழியே சொட்டு நீர்ப்பாசனம் செய்யப்படுவதால், அதன் வழியே செல்லும் நீர் சுத்தமானதாக இருக்க தேவைப்படும் பல்வேறு விதமான பில்டர்கள் மற்றும் பில்டருக்கான  உதிரிப் பாகங்கள்,  தண்ணீருடன் உரத்தையும் சேர்த்து தெளிக்கும் வசதிகளைத் தரும் உபகரணங்கள்,  சொட்டு நீர்ப் பாசன வசதிகளுக்குத் தேவைப்படும் பல்வேறு விதமான இணைப்பு பைப்புகள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது.

தெளிப்பான் நீர்ப்பாசனப் பிரிவு

மழை பெய்வதைப்போன்றே நீர்ப் பாசனம் செய்வதற்கு தெளிப்பான்கள் (ஸ்ப்ரிங்க்லர்ஸ்) தேவைப்படுகின்றன.  இந்த வகை நீர்ப்பாசனப் பிரிவுக்கு தேவையான ஸ்பிரே ஹெட்கள்,  ரெயின் போர்ட் ஸ்ப்ரிங்க்லர்கள்,  ஓவர்ஹெட் ஸ்ப்ரிங்க்லர்கள், ரெயின் கன்கள்,  வீடு மற்றும் நிறுவனங்களில் இருக்கும் புல்வெளிகளில் ஈரப்பதத்தை உறுதிசெய்ய உதவும் தெளிப்பான்கள், இந்த வகைப் பாசனத்துக்குத் தேவையான பில்டர்கள்,  வால்வுகள், ஃபிட்டிங்குகள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்