கேட்ஜெட் ஸ்கேன்

Gadgetsஞா.சுதாகர்

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 2 Apple Watch Series 2

ஆப்பிள் ஐபோன் 7 அறிமுகமான அதே நாளில், ஆப்பிளின் சீரிஸ் 2 வாட்சும் அறிமுகப்படுத்தப்பட்டது. முந்தைய சீரிஸ் 1-ஐ விட, பல மாற்றங்களை இதில் செய்துள்ளது ஆப்பிள். முந்தைய வாட்சை விடவும் இதில் கூடுதலாக இருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று இன்பில்ட் ஜிபிஎஸ் வசதி. அடுத்தது வாட்டர் ரெசிஸ்டன்ட். S2 சிப்பையும், டூயல் கோர் பிராஸசரையும் கொண்டுள்ளது. இதனால் முந்தைய ஆப்பிள் வாட்சை விடவும் 50% வேகமாக இயங்கும் என்கிறது ஆப்பிள்.

இதில் செகண்ட் ஜெனரேஷன் OLED ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதனால் முதல் சீரிஸ் வாட்சைவிட, இருமடங்கு வெளிச்சம் நிறைந்ததாக இருக்கும். சூரிய வெளிச்சத்திலும் டிஸ்ப்ளேவை நன்றாகப் பார்க்க முடியும்.

இதில் இன்பில்ட் ஜிபிஎஸ் வசதி இருப்பதால், நாம் நடக்கும், ஓடும் தூரங்களை இதிலேயே கணக்கிட முடியும். Watch OS 3-ல்தான் இந்த வாட்ச் இயங்குகிறது. இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கேற்ப,  வாட்ச்கென புதிய ஆப்ஸ்களும் வரவிருக்கின்றன. 

ஐபோன் 7-ல் இயர்போனுக்குப் பதிலாக, இசை கேட்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘Air Pods’ மூலம், இந்த வாட்சிலும் இசை கேட்க முடியும். 42 mm மற்றும் 38 mm என இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது.  விலையானது வாட்ச் மெட்டீரியலான அலுமினியம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் செராமிக் ஆகியவற்றைப் பொறுத்து மாறும். அக்டோபர் 7 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

பிளஸ்:

வாட்டர் ரெசிஸ்டன்ட்

புதிய OLED ரெட்டினா டிஸ்ப்ளே

டிசைன் மற்றும் ஸ்டைல்

மைனஸ்:

மற்ற வாட்ச்களோடு ஒப்பிடுகையில், இதன் விலை கொஞ்சம் அதிகம்.

விலை


ரூ.32,900 ரூபாயில் இருந்து துவங்குகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்