புரமோட்டர்கள் தங்கள் பங்குகளை விற்பது, வாங்குவது... முதலீட்டாளர்களுக்குச் சாதகமா, பாதகமா?

பாபு கோதண்டராமன், பங்குச் சந்தை நிபுணர்.

ங்குச் சந்தை முதலீட்டிலே முக்கியமான அம்சம் எந்தப் பங்குகளை வாங்கி முதலீடு செய்வது, எந்தப் பங்குகளை விற்று, முதலீட்டைத் திரும்ப எடுப்பது என்பதே. 

பல்வேறு விஷயங்களை கவனித்தபின் இந்த முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம். அப்படி கவனிக்கத்தக்க விஷயங்களில் ஒன்று, புரமோட்டர்கள் தங்களுக்குச் சொந்தமான பங்குகளை விற்பதும், திரும்ப வாங்குவதும்.

ஒரு சில கம்பெனிகளின் புரமோட்டர்கள் தங்கள் கைவசமிருக்கும் பங்கின் ஒரு பகுதியை விற்கப் போவதாக அறிவித்து, அதற்கான காரணங்களை எடுத்துச் சொல்வார்கள். இன்னும் சில கம்பெனிகளின் புரமோட்டர்கள், தங்கள் நிறுவனத்தில் தங்களுக்கு உள்ள பங்கு விகிதாச்சாரத்தினை உயர்த்திக்கொள்ள ‘பைபேக் ஆஃபர்’ அறிவித்து, பங்குச் சந்தை யிலோ அல்லது குறிப்பிட்ட வரைமுறை களுக்கு உட்பட்டு வெளிச் சந்தையிலோ பங்குகளை வாங்குவார்கள்.

புரமோட்டர்கள் இப்படிப் பங்குகளை வாங்குவதும், விற்பதும் சிறு முதலீட்டாளர் களுக்கு நன்மை தருமா அல்லது பாதகமாக அமையுமா என்பதைப் பார்க்க வேண்டும். முதலில், பங்குகளைத் திரும்ப வாங்கும் ‘பைபேக் ஆஃபர்’ பற்றி பார்ப்போம்.

பங்குகளைத் திரும்ப வாங்குதல்!


கம்பெனிகளின் புரமோட்டர்கள் தங்கள் கம்பெனியின் செயல்திறன் மேல் தங்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுவதற்கு, தங்கள் நிறுவனத்தின் பங்குகளைத் திரும்ப வாங்குகிறார்கள். அதாவது, “எங்களுடைய தயாரிப்புகள், சேவைகள் மக்களால் வரவேற்கப் பட்டு, பயன்படுத்தப்பட்டு  மிகப் பெரிய ஆதரவைப் பெற்றுள்ளன. அது காலாண்டு அறிக்கைகளில் விற்பனையாகவும், லாபமாகவும் பிரதிபலிக்கிறது. இதே நிலை இன்னமும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று நம்புகிறோம். அதனால் புதிதாக ஏதும் தொழில் தொடங்காமல், புதிய முதலீடுகளை வேறு எதிலும் செய்யாமல், எங்களது கம்பெனி பங்குகளையே நாங்களே வாங்க முடிவு செய்கிறோம்” என நேரடியாகவும் மறைமுக மாகவும் குறிப்பிட்டு ‘பைபேக் ஆஃபர்’  அறிவிப்பார்கள்.

அந்த அறிவிப்பிலேயே, பங்குகளைத் திரும்ப வாங்கும் விலை (அல்லது குறைந்தபட்ச விலை - ஃப்ளோர் ப்ரைஸ்), இந்தத் திட்டத்துக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, எத்தனை பங்குகள் திரும்ப வாங்கப்படும், இதனால் புரமோட்டர்களின் ஷேர் ஹோல்டிங் எவ்வளவு  உயரும் என்பதைத் துல்லியமாக சொல்லி விடுவார்கள்.

சில சமயங்களில், ஒரு நிறுவனத்தை பங்குச் சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளவும் (Delist) ‘பை பேக் ஆஃபர்’களை சில நிறுவனங்கள் அறிவிக்கும். 

இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ஹெச்யூஎல்!

பங்குகளைத் திரும்ப வாங்குவதில் முதலீட்டாளர்களை எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நிறுவனம் என்றால் அது ஹிந்துஸ்தான் யூனிலீவர்(HUL) என்று சொல்லலாம். கடந்த 2013 ஏப்ரல் 29 அன்று தங்கள் நிறுவனத்தின் பங்குகளை திரும்ப வாங்கப் போவதாக அறிவித்தது இந்த நிறுவனம்.

ஹிந்துஸ்தான் யூனிலீவரின் புரமோட்டர்களான யூனிலீவர் ஓர் ஐரோப்பிய நிறுவனமாகும். இந்தியாவிலிருக்கும் தனது துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவரின் பங்குகளின் கையிருப்பை, 75 சதவிகிதமாக உயர்த்த முடிவு செய்துள்ளதால், 48.70 கோடி பங்குகளை (22.52% பங்குகள்) பைபேக் ஆஃபர் முறையில் திரும்ப வாங்கப் போவதாக ஒப்பன் ஆஃபர் அறிவித்தது. இதற்காக ஆகப்போகும் முதலீட்டின் அளவு ரூ.19,200 கோடி. அவ்வளவும் அந்நியச் செலாவணி முதலீடாக வரும் வாய்ப்பிருந்தது. 

இந்த அறிவிப்பு வந்தவுடனேயே ஒரே நாளில் இந்தப் பங்கின் விலை 17% உயர்ந்தது. காரணம் என்ன தெரியுமா? அந்த நிறுவனத்தின் பங்கு ரூ.497.80 என வர்த்தகமானபோது, அதனை ரூ.600-க்குத் திரும்ப வாங்கிக்கொள்வதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. இது சந்தை விலையைவிட சுமார் 21% அதிகம். மிக நம்பகமான நிறுவனத்தின் அறிவிப்பாக இருந்ததினால், அடுத்த நாளே பங்கின் விலையை ரூ.600-க்கு அருகே சென்றுவிட்டது. ரூ.575-க்குப் பங்கை வாங்கினாலும் ரூ.600-க்கு விற்றால் லாபம்தானே என்று நினைத்தார்கள் முதலீட்டாளர்கள்.

இந்தப் பை பேக் ஆஃபரின் ப்ரீமியத்திற்கான காரணமாக, “எங்களது இந்தியக் கிளை நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தினை முதலீட்டாளர்கள் குறைத்து (அண்டர் வேல்யூ – undervalue) மதிப்பிட்டுள்ளார்கள். இது தவறு. இதனைச் சுட்டிக்காட்டவே நாங்கள் 21% பிரீமியத்தில் எங்கள் பங்குகளைத் திரும்ப வாங்க முடிவு செய்தோம்” என்று சொன்னார்கள் ஹெச்.யூ.எல்  புரமோட்டர்கள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்