பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர் குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை.SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ் :

கடந்த வாரத்தில், சர்வதேச காரணிகளால் இந்திய பங்குச் சந்தை தலைகீழாக இறங்கி வர்த்தகமாகத் தொடங்கியது. அதுவும் குறிப்பாக, சந்தை பெரிய (சுமாராக 130 புள்ளிகள்) கேப் டவுனில் இறங்கி வர்த்தகமாகத் தொடங்கியது. அந்த இறக்கத்தைத் தொடர்ந்து சந்தை அவ்வப்போது சிறிய ஏற்றம் கண்டாலும், தன் பழைய உச்சத்தை உடைத்து, உயர்ந்து வர்த்தகமாகவில்லை.

அதனால் பெரும்பாலான வியாபாரிகள் தாங்கள் எடுத்த லாங் பொசிஷன்களை விற்று வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். சந்தை உயராதததால், சந்தையை சார்ந்திருக்கும் வியாபாரிகளின் நிலையும் மாறவில்லை.

சந்தை சற்றே வீரியத்தோடு முன்னேறியதும், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தடைபட்டு முழுமையாக நின்றுவிட்டது. பலரும் லாபத்தை புக் செய்ததால் சந்தை மேற்கொண்டு உயரவில்லை எனலாம்.

இந்தச் செயலால்தான் சந்தையில் வர்த்தகர்கள் பங்குகளை விற்க முடியாமல் இருக்கிறார்கள். சந்தையும் உயர வழி இல்லாமல் தேக்கநிலையில் இருக்கிறது.

தற்போதைய சூழலில் வங்கித் துறையைத் தவிர மற்ற துறைகள் முன்னணிக்கு வரவேண்டும். அப்படி மற்ற துறைகளும் முன்னேறினால் மட்டுமே, சந்தை அடுத்தக் கட்டத்துக்கு  முன்னேற முடியும். அந்த வகையில் சில ஐ.டி. துறை சார்ந்த பங்குகள் விலை அதிகரித்து வர்த்தகமாகி வருவது சற்று நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

இப்போதைய சூழ்நிலையில் நிஃப்டிக்கு, 8880 - 8930 என்கிற லெவல்கள் வலுவான ரெசிஸ்டன்ஸாக இருக்கிறது. பேங்க் நிஃப்டியைப் பொறுத்தவரை, 20300 - 20500 என்கிற லெவல்கள் வலுவான ரெசிஸ்டன்ஸாக இருக்கிறது. 

இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள், அடுத்த வாரங்களிலும் தொடர்ந்து விலை அதிகரித்து வர்த்தகமானால், நிஃப்டி ஐ.டி.யை வாங்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்