நிஃப்டி எதிர்பார்ப்புகள்: அமெரிக்க வட்டி விகித முடிவே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்!

டிரேடர்ஸ் பக்கங்கள் டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ரடிகள் பலம்பெறு வதைப் போன்ற தோற்றம் தரும் டெக்னிக்கல்கள்  என்றும் 8788 என்ற லெவலை உடைத்து வால்யூமுடன் கீழே சென்று மல்டிபிள் குளோஸா னால் மட்டுமே பிராஃபிட் புக்கிங்கி னால் வந்த இறக்கம் தொடரும் என்று எடுத்துக் கொள்ள      வேண்டும் என்றும் அப்படி இறக்கம் வந்தாலுமே ஷார்ட் சைட் வியாபாரத்தை தவிர்ப்பது நல்லது என்றும் வாரத்தின் இறுதியில் மீண்டும் மேல் நோக்கிய மூவ்கள் வந்துவிடக் கூடும் என்றும் சொல்லி இருந்தோம். 

நான்கு டிரேடிங் தினங் களை  கொண்டிருந்த வாரத்தில் ஒரு நாள் கணிசமான அளவு இறக்கத்தையும் மூன்று நாட்கள்  ஓரளவு ஏற்றத்தையும் சந்தித்த நிஃப்டி வார இறுதியில் வாராந் திர ரீதியாக  86 புள்ளிகள் இறக்கத்துடன் முடிவடைந்தது. 

சென்ற வாரத்தில் நடந்த ஏற்ற இறக்கங்களால் டெக்னிக் கல் செட் அப் பெரிய அளவில் மாறி விடவில்லை.  இறக்கம் மீண்டும் வரக்கூடிய நிலையி லேயே சந்தை இருப்பதையே டெக்னிக்கல்கள் காட்டுகின்றன. எனவே, செய்தி கள் நெகட்டிவ் வாக இருந்தால் மீண்டும் வேகமான இறக்கம்  எந்த நேரத்திலும் வந்துவிடக்கூடும்.

தற்போதைக்கு நிஃப்டி 8510 லெவல்கள் வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்பு  தொடர்ந்து இருந்துகொண்டு தான் இருக்கிறது என்பதை நினைவில் வைத்தே டிரேடர்கள் டிரேட் செய்யவேண்டியிருக்கும்.

புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் நல்ல ஃபண்டமென்டல்கள் இருக்கும் ஸ்டாக்குகளில் மட்டும் சிறிய எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் கூடிய லாங் சைட் வியாபாரத்துக்காக மட்டுமே சந்தையை ட்ராக் செய்யலாம்.

வீக்னெஸ் கண்ணில் தெரிந் தாலுமே ஷார்ட் சைட் வியாபரத்தை முழுமையாகத் தவிர்க்கவேண்டும்.   புதன்கிழமை வரையிலும் ஓவர்நைட் பொசிஷன்களை முழுமையாகத் தவிர்ப்பதே நல்லது.

வால்யூமின் மீதும் செய்தி களின் மீதும் கவனம் வைத்து வியாபாரம் செய்யவேண்டி யிருக்கும்.  வாரத்தின் மத்தியில் குழப்பமான சூழ்நிலை உருவாகி டைரக்‌ஷன்லெஸ் நிலைமை வந்தால் வியாபாரத்தினை நிறுத்திக்கொள்வது நல்லது. கவனம் தேவை.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக் களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்கு கள் – விலைகள் மற்றும் வால்யூம் கள் 16-09-16 அன்றைய வியா பாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்