நூல் விலை திடீர் ஏற்றம்... - தேக்கத்தில் ஜவுளி ஏற்றுமதி! | Rising Thread Prices - Textile exports stagnation - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/04/2017)

நூல் விலை திடீர் ஏற்றம்... - தேக்கத்தில் ஜவுளி ஏற்றுமதி!

துரை.வேம்பையன்

ரூர் மாவட்டம், ஜவுளி வர்த்தகத்துக்குப்  பிரசித்தி பெற்றது. இங்கு உற்பத்தியாகும் பெட்ஷீட்டுகள், திரைச்சேலைகள், மிதியடிகள், தரைவிரிப்புகள், குஷன்கள் போன்றவை இந்தியாவில் மட்டுமல்லாமல், அமெரிக்கா,  ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகி வருகின்றன. இதனால் கரூர் ஜவுளி வியாபாரம், கடந்த காலத்தில் ஏறுமுகத்திலேயே இருந்தது. சமீபத்தில், ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகரில் நடந்த ஜவுளிக் கண்காட்சியில், கரூர் ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.300 கோடிக்கு மேல் ஆர்டர் கிடைத்தது.

ஜவுளித் துறையில் கொடிக்கட்டிப் பறக்கும் சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்குப் போட்டியாகக் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்கள் திறமையைக் காட்டி, இந்தப் பெரிய ஆர்டரைப் பெற்றார்கள். ஆனால், சமீபத்தில் திடீரென ஏற்றப்பட்டிருக்கும் நூல் விலை ஏற்றத்தினால் திக்குமுக்காடிப்போயுள்ள கரூர் ஜவுளி உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர் களும் அந்த ஜெர்மனி ஆர்டர்  கேன்சலாகிவிடுமோ?’ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசினார் ஸ்ரீசாய்சேஷன் ஏற்றுமதி கம்பெனி நிறுவனர் சுந்தரேசன். “கரூரில் சுமார், 300 ஜவுளி உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள். 400-க்கும் மேற்பட்ட ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இருக்கிறார்கள். ஜெர்மனியின் 330 கோடி ரூபாய் வர்த்தகத்தைப் பெறும் அளவுக்கு ஒரு மாதம் முன்புவரை இங்கே ஜவுளித் தொழில் ஏறுமுகத்தில்தான் இருந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க