மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 4 - பெற்றோர்களின் பேச்சைக் கேட்காதீர்கள்! | Keep Thinking Different - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/06/2017)

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 4 - பெற்றோர்களின் பேச்சைக் கேட்காதீர்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேல்

ந்த அத்தியாயத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைய வேண்டாம். என்னைத் தவறாகவும் புரிந்துகொள்ள வேண்டாம். இந்த உலகத்தில் நம் பெற்றோர்களைத் தவிர வேறு யாராலும் நமக்கான தேவைகளைப் பார்த்துப் பார்த்துச் செய்ய முடியாது. நமது பிள்ளைகள் கீழே விழுந்துவிடக் கூடாது, கஷ்டப்படக்கூடாது, அவர்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால்தான் ரிஸ்க் இல்லாத ஒரு வாழ்க்கையை நமக்குத் தேர்வு செய்து தருவார்கள்.

ஆனால், நம் எதிர்கால வாழ்க்கையில் நாம் பயணிக்கப்போகும் வழியை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான், அதில் நாம் சுதந்திரமாகவும், பொறுப்போடும் பயணிக்க முடியும். இதுவே வேறு யாராவது கொடுத்த யோசனையின்படி நாம் ஒரு விஷயத்தைச் செய்யும்போது, அதில் எதுவும் தவறு நடந்தால்  அதற்கானப் பழியைத் தூக்கி நாம் அவர்கள் மீது போட்டுவிடுவோம். ஆனால், நாமே அந்த வழியைத் தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் தவறு நேர்ந்தால் அது நம் தலையில்தான் விழும் என்பதை மனதில் வைத்துக் கவனமாகச் செயல்படுவோம். இதனால் நாம் தவறு செய்வதற்கான வாய்ப்புக் குறையும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க