வளர்ச்சி குறையும் தமிழகம்! | Editor opinion - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/06/2017)

வளர்ச்சி குறையும் தமிழகம்!

ஹலோ வாசகர்களே..!

லரது கவனத்தைப் பெறாமலே போயிருக்கிறது தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் குறித்து வெளியான தகவல்கள். கடந்த 2016-17-ம் ஆண்டில் தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 7.9 சதவிகிதம். இது, கடந்த 2015-16-ம் ஆண்டைக் காட்டிலும் ஏறக்குறைய 1 சதவிகிதம் குறைவு.

சேவைத் துறையில் நமது மாநிலம் அடைந்த வளர்ச்சியைப் பார்த்தால் மகிழ்ச்சி பொங்குகிறது. ஆனால், உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளில் நாம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்த்தால், வேதனைதான் மிஞ்சுகிறது. உற்பத்தித் துறையில் வெறும் 1.65% வளர்ச்சியை மட்டுமே நாம் கண்டுள்ளோம். 2015-16-ல் 7.19 சதவிகிதமாக இருந்த விவசாயத் துறை வளர்ச்சி, கடந்த 2016-17-ல் வெறும் 3.98 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது.

இந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து நமக்குச் சில விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன. சேவைத் துறையின் வளர்ச்சியில் மட்டுமே நாம் தொடர்ந்து கவனம் செலுத்துவதைவிட, உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளின் வளர்ச்சியிலும் நாம் அதிக அக்கறையுடன் செயல்பட்டாக வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க