திவால் சட்டத்தின் பிடியில்12 நிறுவனங்கள்... - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்? | central government new act in Bank - What Investors can do - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/06/2017)

திவால் சட்டத்தின் பிடியில்12 நிறுவனங்கள்... - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

ஜெ.சரவணன்

பிரதமர் மோடி அரசின் முக்கியமான சீர்திருத்தங்களில் இந்தத் திவால் சட்டமும் ஒன்று. ஏறக்குறைய ரூ.8 லட்சம் கோடி வாராக் கடன் சுமையால் வங்கிகள் பெரும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றன. முக்கியமாக, பொதுத்துறை வங்கிகளுக்கு வாராக் கடன் பிரச்னையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கிகளின் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் தடைப்பட்டுள்ளது. இந்த நிலையிலிருந்து வங்கிகளை மீட்டெடுக்க எடுக்கப்பட்ட ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் ஒன்றுதான் இந்தத் திவால் சட்டம்.

அதிக அளவில் கடன் வாங்கித் திரும்பச் செலுத்த முடியாமல் திணறும் நிறுவனங்களை இந்தத் திவால் சட்டத்தின் கீழ் கொண்டுவந்து, அவற்றின் கடனைத் தீர்க்க என்ன வழி என்று திட்டமிட்டுச் செயல்படுத்தப்படும். மேலும், நிறுவனங்களின் பொருளாதார நிலையைச் சீர்செய்யத் தேவையான  நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாறாக, சீர்செய்ய வாய்ப்பே இல்லையெனில், அந்த நிறுவனத்தின் சொத்துகள் விற்கப்பட்டுக் கடன் அடைக்கப்படும். இதுதான் திவால் சட்டத்தின் அம்சம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க