நிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்கு பின்னால் திருப்பங்கள் வரக்கூடும்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

நான்கு நாள்கள் இறக்கத்திலும் ஒரு நாள் ஏற்றத்திலும் சந்தை முடிவடைந்தது. 9565 என்ற குறைந்தபட்ச அளவையும் 9698 என்ற அதிகபட்ச லெவலையும் தொட்ட நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 13 புள்ளிகள் இறக்கத்துடன் முடிவடைந்தது.

வாராந்திர சார்ட்டில் வீக்னெஸ் சற்று அதிகமாகத் தெரிய ஆரம்பித்துள்ளது. மே மாதம் 26-ம் தேதியிலிருந்தே நிஃப்டி, 9560 – 9700 என்ற லெவல்களுக்கு நடுவே சிக்கிக்கொண்டு வெளியேவர முடியாமல் தவிப்பதைப் போன்ற தோற்றம் நிலவுகிறது.

இந்த வாரத்தில் 9698 என்ற லெவலைத்தொட்டு, பின்னர் உடனடி இறக்கத்தைச் சந்தித்த நிஃப்டி 9520/9415/9330 போன்ற லெவல் களையே முக்கிய சப்போர்ட் களாகக் கொண்டிருக்கிறது. 9520 என்ற லெவலைத்தாண்டி வால்யூமுடன் இறங்கினால் (மல்டிபிள் குளோஸிங் நடந்தால்)  9330 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது என்பதை நினைவில்கொள்ளுங்கள். அதுபோன்ற சூழலில், இறங்க ஆரம்பித்தவுடனேயே        டெக்னிக்கல் ரெக்கவரியை எதிர்பார்த்து வாங்கிவிடக் கூடாது. நல்லதொரு சப்போர்ட் லெவலைத் தொடும்வரை காத்திருந்து பின்னரே வியாபாரத்தில் இறங்கலாம்.
 
9600 என்ற லெவலுக்கு மேலேயே இருந்து நல்ல செய்திகள் வரும்பட்சத்திலும் கூட, 9700 என்ற லெவலைத் தாண்ட நிறையவே பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும் என்பதால் ஸ்டாக் ஸ்பெசிபிக் வியாபாரத்தில் மட்டுமே ஹைரிஸ்க் டிரேடர்கள் ஈடுபடலாம். நான்கே டிரேடிங் தினங்களைக்கொண்ட ஜூன் மாத எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி வாரம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எக்ஸ்பைரிக்குப் பின்னால் திடீர் திருப்பங்கள் வரலாம் என்பதால் ஓவர்நைட் பொசிஷன்களை வியாழனன்று முழுமையாகத் தவிர்ப்பதே நல்லது. கவனம் தேவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்