பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்

நீண்ட நாள்களாகவே இந்தியப் பங்குச் சந்தையின் போக்கில் மாற்றம் இருக்கும் என்று தெரிந்தது. குறைந்தபட்சம், அந்த மாற்றம் நடக்கும் என்பதற்கான அறிகுறியைப் பார்க்க முடிந்தது. ஜூன் 6-ம் தேதி, நிஃப்டி 9705 என்ற உச்ச நிலையை அடைந்த பிறகு சந்தை கரெக்‌ஷனுக்கு உள்ளானது. ஆனால், அதன்பிறகு மீண்டும் ஏற்றமடைந்து, புதிய உச்சமாக 9716 என்ற நிலையை ஜூன் 22-ம் தேதி அடைந்தது. அந்த உச்சத்திலிருந்து ஏற்பட்ட திருப்பமானது உடனடியாக இருந்ததோடு, மிகக் குறைவாகவும் இருந்தது. ஆனால், கடந்த வாரத்தின் கடைசி இரு தினங்களில், சமீபத்திய இறக்கமான 9584 புள்ளிகள் என்ற நிலையிலிருந்து அடைந்த ஏற்றத்தை முழுவதுமாக இழந்தது.

மேலும், இந்த நிலையையும் தாண்டி கீழே இறங்கியது. இது வழக்கமான கிளாசிக் ரிவர்சல் பேட்டர்ன் இல்லை. ஆனால், அட்வான்ஸ் உச்ச நிலையில் அதைப்போன்றே உருவாகியிருப்பது, முந்தைய நிலைகளில் இருந்த காரணிகளில் சில மாற்றங்கள் நடந்திருக்கலாம் என்ற அறிகுறியைத் தெரியப்படுத்துகிறது. தொடர்ச்சியாக 2-3 நாள்களின் இறக்க நிலைகளுக்குக் கீழே செல்லாமல் அடைந்து வந்த ஏற்றமானது தற்போது உடைந்துபோயிருக்கிறது.  இந்தத் தருணத்தில் சற்றுக் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

பேங்க் நிஃப்டியும் கடந்த வாரத்தில் புதிய உச்சத்தை அடைந்தது. ஆனால், நிஃப்டியில் ஏற்பட்ட மாற்றத்தினால் பேங்க் நிஃப்டியும் வாரத்தின் இறுதி நாள்களில் இறக்கத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனாலும், நிஃப்டி அளவுக்கு பேங்க் நிஃப்டியின் நகர்வுகள் மோசமாக இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்