போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 4 - ஊபர் காரு... எப்படி வந்துச்சு பேரு..?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டாக்டர் சங்கர சரவணன்

ரிரு வாரங்களுக்கு முன் ‘Base Erosion and Profit Shifting’ அதாவது ‘அடி அரிமானம் மற்றும் லாபச் சுருட்டல்’ என்றால் என்னவென்று கேட்டிருந்தோம். ஆனால், இந்தக் கேள்விக்குச் சரியான  விடை எதுவும் வாசகர்களிடமிருந்து வரவில்லை.

அண்மை ஆண்டுகளாகப் பொருளாதாரச் செய்திகளில் இடம்பெறும் ஆங்கிலத் தொடர் இது. இதைச் சுருக்கமாக பெப்ஸ் பிரச்னை (BEPS Issue) என்பார்கள். இந்த பெப்ஸ் பிரச்னை என்பது பல நாடுகளில் தொழில் செய்யும் முக்கிய பன்னாட்டு நிறுவனங்கள், அதிக வரிவிகிதம் கொண்ட நாடுகளில் வரி ஏய்ப்பு செய்வதற்காக, அந்த நாடுகளில் இருந்து பெறும் தங்கள் வருமானம், குறைவான வரிவிகிதத்தைக்கொண்ட வேறு நாட்டில் இருந்து வருவதுபோல சித்திரிக்கும் தில்லுமுல்லைத்தான் பெப்ஸ் என்கிறார்கள். பெப்ஸ் தந்திரங்களைப் பற்றியும் இவற்றை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும்  ஜி-20 நாடுகள் கடந்த நான்கைந்து வருடங்களாகக் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்தப் பிரச்னை குறித்து, 2012-ல் மெக்சிகோவில் நடைபெற்ற ஜி- 20  மாநாட்டில் முதன்முதலாக விவாதிக்கப்பட்டது. வரி விதிமுறைகளில் நாடுகளுக்கிடையே காணப்படும் வேறுபாடுகள், வரிச் சட்டங்களின் சந்து பொந்து, இண்டு இடுக்கு ஆகியவற்றில் நுழைந்து தப்பிப்பது, டிஜிட்டல் வணிகம் மூலம் பொருள்களை  சப்ளை செய்வதன் மூலம், அந்த சப்ளை எந்த நாட்டின் வரிச் சட்டத்தின் கீழும் வராது என்று முரண்டு பிடிப்பது எனப் பல உத்திகளைக் கையாண்டதால் இந்தப் பிரச்னை, ஜி-20 நாடுகளுக்குத் தலைவலியாக உருவெடுத்துவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick