ஷேர் மார்க்கெட் ஏபிசி - 5 - பங்கு வியாபாரத்தின் ஃபர்ஸ்ட் ஸ்டெப்! | Share Market ABC - Nanayam Vikatan | நாணயம் விகடன்
தோல்வியை வரவேற்போம்!
இன்ஸ்பிரேஷன்: காந்தியிடம் கற்ற பாடம்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/07/2017)

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 5 - பங்கு வியாபாரத்தின் ஃபர்ஸ்ட் ஸ்டெப்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

செல்லமுத்து குப்புசாமி

நீங்கள் ஏதேனும் வங்கியில் பாதுகாப்புப் பெட்டகச் சேவையைப் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் என்ன மாதிரியான பொருட்களை அதில் வைப்பீர்கள்? பொதுவாக விலையுயர்ந்த ஆபரணங்கள், பொற்காசுகள், நமது சொத்துகள் தொடர்பான பத்திரங்கள் முதலியவற்றை அந்த லாக்கரில்  பூட்டி வைப்போம். யாருக்கும் தெரியாத ரகசியங்கள், பழைய காதலியுடனான புகைப்படங்கள் என்பவையெல்லாம் வெகு சிலருக்கு மட்டுமே வாய்க்கும் சாத்தியங்கள்.

முக்கியமான ஆவணங்களை முறையாகப் பாதுகாத்து வைப்பது ஒரு கலை. நம் தாத்தா தாம்பரத்தில் வாங்கிய நிலப் பத்திரம், அப்பா அரக்கோணத்தில் வாங்கிய வீட்டு மனையின் பத்திரம், இருபது வருடம் கழித்துப் பணம் திரும்ப வரும் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பத்திரம் என எல்லாமுமே நம்மிடம் பத்திரமாக இருக்க வேண்டும். திடீரென ஒரு நாள் கேட்டால் நம்மால் தேடி எடுக்க முடியுமா? அப்படி எடுக்க முடியாதவர்கள் பேங்க் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கலாம்.

நிலங்களின் உரிமைப் பத்திரங்கள் இப்படியென்றால் கம்பெனிகளின் உரிமைப் பத்திரங்களை எப்படி பாதுகாக்க வேண்டும்? பங்குப் பத்திரங்களைப் பற்றித்தான் பேசுகிறேன். ஒரு கம்பெனியில் நாம் ஒரேயொரு பங்குகூட வைத்திருக்கலாம் அல்லது ஆயிரக்கணக்கில் பங்குகளை வைத்திருக்கலாம். முன்பொரு காலத்தில் அவையெல்லாம் இன்ஷூரன்ஸ் பாலிசி போல இருக்கும். இப்போது டிஜிட்டல் ஆக்கி விட்டார்கள். இப்போது என்றால் அதற்கான ஆயத்தங்கள் தொடங்கி இருபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. கடந்த பத்தாண்டுகளில் பத்திர வடிவில் ஷேர்களைப் பார்த்திருக்கவே இயலாது என்கிற நிலைதான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க