கமாடிட்டி டிரேடிங்!

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

ங்கம்

சென்ற வார ஆரம்பத்தில் ஒரு கேப் டவுனில் தொடங்கியது.  28,750 என்ற எல்லையில் தடுக்கப்படலாம்.  இந்த இடத்தில் இருந்து கீழே இறங்கி இப்போது ஆதரவு எடுத்துள்ள 28,400 என்ற எல்லையை நோக்கி வரலாம் என கடந்த வாரம் சொன்னோம்.

நாம் சொன்னபடியே ஏறக்குறைய நடந்துள்ளது.  தங்கம் ஒரு கேப் டவுனில் இறங்கி, நாம் சொன்ன இலக்கை நோக்கி இறங்கியது.  குறைந்தபட்சப் புள்ளியாக 28,379-யைத் தொட்டு, அதன்பின் ஏற ஆரம்பித்தது.   இந்த ஏற்றமானது மேலே 28,765 வரை தொடர்ந்துள்ளது.

இதே எல்லைதான் ஆதரவாக இருந்ததாக முன்பு நாம் குறிப்பிட்டோம். அதே எல்லை தற்போது தடை நிலையாக மாறி உள்ளது. எனவே, தற்போது எல்லைகள் ஆதரவாக 28,400-ம், தடை நிலையாக 28,750-ம் உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், இந்த விரிவான இரண்டு எல்லைகளுக்குள்ளாக ஒரு நெருங்குதல் நிகழ்ந்து வருகிறது.  அதாவது,  கடந்த சில தினங்களில் தங்கம் நகரும் போது, அதனுடைய உச்சம் மற்றும் நீச்சம் குறைந்துகொண்டே வருகிறது. இதனால் அடுத்து வருகிற நாள்களில் ஒரு வலிமையான பிரேக் அப் அல்லது பிரேக் டவுன் நிகழ வாய்ப்புள்ளது. இந்தக் குறுகிய நகர்வின் முக்கியமான ஆதரவு எல்லை  28,450 ஆகும்.  மேலே குறைந்துகொண்டே வரும் தடைநிலை என்பது 28,620 ஆகும்.   எனவே, அடுத்து ஒரு பெரிய நகர்வுக்குத் தங்கம் காத்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்