பக்கா லாபம் தரும் ‘பணப்பயிர்’ சாகுபடி!

சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், Wmsplanners.com

விவசாயத்தையும் முதலீட்டையும் ஒருவிதத்தில் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். முதலீடு என்பதும் விவசாயம் போலத்தான். விவசாயத்தில் எப்படி சிறு விவசாயி முதல் பண்ணையார்கள் வரை உள்ளனரோ அதுபோலத்தான் முதலீட்டிலும்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு ஏழை, பணக்காரன், படித்தவன், பாமரன் என்று எந்தப் பேதமும் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். சம்பாதிக்கும் காலத்தில் சிறு தொகையையாவது முதலீடு செய்பவர்கள் மட்டுமே, பிற்காலத்தில் அதை பெரும் தொகையாக அறுவடை செய்ய முடியும். ஷேர் மார்க்கெட் ஏறுகிறது, இறங்குகிறது என்று சாக்குப்போக்குச் சொல்பவர்கள் வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்க முடியும்.

விவசாயத்தில் எப்படி நெல், கோதுமை, கேழ்வரகு போன்றவற்றை உணவுப்பயிர் என்றும் கரும்பு,  தேக்கு, டீ, காபி போன்றவற்றைப் பணப்பயிர் என்றும் சொல்கிறார்களோ அதுபோல முதலீட்டிலும் கடன் சார்ந்த ஃபண்டுகளை உணவுப்பயிருக்கும், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளை பணப்பயிருக்கும் ஒப்பிடலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்