சம்பளத்தை அடிப்படையாக வைத்து வங்கிக் கடன் கிடைக்குமா?

கேள்வி - பதில்

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் என் மாதச் சம்பளம் ரூ.40,000. என் மகளின் திருமணத்துக்காக என் சம்பளத்தை அடிப்படையாக வைத்து வங்கியில் ரூ.10 லட்சம் கடன் வாங்க முடியுமா?

-ஜெயக்குமார், திருச்சி


பிரபாகரபாபு, துணை மண்டல முன்னாள் மேலாளர், பாங்க் ஆஃப் இந்தியா

``வங்கிகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்குத் தனிநபர் கடன் கொடுக்கின்றன. பொதுவான நடைமுறை, தனிநபர் பணிபுரியும்  நிறுவனத்தின் வங்கிக் கணக்கு அந்த வங்கியில் இருக்கவேண்டும். தனிநபர், தொடர்ந்து அந்தத் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவராக இருக்க வேண்டும். அவரின் சம்பளம் அதே வங்கிக் கணக்கில் தொடர்ந்து செலுத்தப்படுவதாக இருக்க வேண்டும். கடன் பெறும் தனிநபர், கடன் தொகையைத்  திரும்பிச் செலுத்துவதற்குத் தவறி, நிறுவனத்தைவிட்டே நீங்கிச் செல்லும் நிலையில், அவருக்கான பணிக்கால இருப்புத்தொகையை அந்தத் தனியார் நிறுவனம், வங்கிக்குச் செலுத்துவதாக உத்தரவாதக் கடிதம் வங்கிக்குக் கொடுக்க வேண்டும்.

வங்கி விதிமுறைக்குப் பொருத்தமான வேறு ஒருவரின் கடன் உத்தரவாதப்  பத்திரம் கூடுதலாகத் தேவைப்படலாம். பொதுவாக, இவற்றின் அடிப்படையில் உங்கள் மகள் திருமணத்துக்காக நான்கு லட்சம் ரூபாய் வரையில்  தனிநபர் கடன் பெற வாய்ப்பிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்