விமானப் பயணம்... உங்கள் உரிமை!

ஜெ.சரவணன்

வ்வளவுதான் இந்தியா நவீனமாகிக் கொண்டிருந்தாலும் விமானப் பயணம் என்பது இன்னமும் வளர்ச்சியடையாமல்தான் இருக்கிறது. பயணம் செய்ய மறுக்கப்படுதல், விமானங்கள் தாமதமாதல் மற்றும் ரத்து செய்யப்படுதல் ஆகியவை முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. 

டி.ஜி.சி.ஏ (Directorate General of Civil Aviation) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த வருடம் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 5.12 லட்சம் பயணிகள், பயணம் செய்ய விமானத்துக்குள்  மறுக்கப்படுதல், விமானங்கள் தாமதமாதல் மற்றும் விமானப் பயணம் ரத்துசெய்யப்படுதல் உள்ளிட்ட சிக்கல்களை அனுபவித்திருக்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் பயணி களுக்கு அசெளகர்யத்தை ஏற்படுத்தியதற்காக விமான நிறுவனங்கள், அந்த நான்கு மாத காலத்தில் பயணிகளுக்கு 22 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கியிருக்கின்றன.

விமான நிறுவனங்கள் காலி இருக்கை களோடு விமானங்களை இயக்கும் நிலையைத் தவிர்ப்பதற்காக, இருக்கை அளவைத் தாண்டி, கூடுதலாகப் பயணிகள் இருக்கைகளை புக் செய்யும் வகையில்தான் செயல்பட்டு வருகின்றன. இருக்கை இல்லாததால்  பயணிகள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதனால், அவர்கள் மனஉளைச்சலுக்கும் அசெளகர்யத்துக்கும் ஆளாகின்றனர். மேலும், இயற்கைச் சீற்றங்கள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக விமானம் தாமதமாகவும், ரத்துசெய்யப்படவும் வாய்ப்புள்ளது. இனிவரும் காலம், மழைக்காலம் என்பதால் இதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு ஆளாகும் பயணிகள், தங் களுடைய உரிமைகளையும் அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகளையும் தெரிந்துவைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அவற்றை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick