கவலையில்லாத எதிர்காலத்துக்கு கைகொடுக்கும் முதலீடு! - திருச்சியில் வாசகர்கள் உற்சாகம். | Mutual Funds Event in Trichy - Nanayam Vikatan | நாணயம் விகடன்

கவலையில்லாத எதிர்காலத்துக்கு கைகொடுக்கும் முதலீடு! - திருச்சியில் வாசகர்கள் உற்சாகம்.

சி.ஆனந்தகுமார்

நாணயம் விகடன், ‘மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்’ என்ற தலைப்பில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த கட்டணப் பயிற்சி வகுப்பை, சமீபத்தில் திருச்சியில் நடத்தியது. மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன் பயிற்சியளித்தார்.

வயதுக்கு ஏற்ற ஃபண்டுகளை எப்படித் தேர்வுசெய்வது,  யாரெல்லாம் ரிஸ்க் எடுக்கலாம், ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட் எவை, குறைவான ரிஸ்க் எடுப்பவர்கள் எந்த வகையான ஃபண்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும், வருமான வரி சேமிக்கக்கூடியவர்களுக்கான ஃபண்ட் வகை எது,  எஸ்.ஐ.பி முதலீட்டின் சிறப்பு, கூட்டுவட்டியின் மகிமை என ஃபண்ட் முதலீட்டின் பல விஷயங்களை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள், நீண்டகாலத்தில் கொடுத்துள்ள வருமான உச்சங்களை எடுத்துச் சொல்லி, ரிஸ்க் எடுக்க துணிந்தவர்களும், இளம் முதலீட்டாளர்களும் இந்த வகை ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தகுதியானவர்கள் எனச் சுட்டிக்காட்டினார் பயிற்சியாளர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick