பெட்ரோல், டீசல்... ஏன் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவில்லை?

சோ.கார்த்திகேயன்

‘ஜி.எஸ்.டி-யில் 28%-க்கு மேல் வரி விதிக்க முடியாது. ஆனால், தற்போது மத்திய அரசின் சுங்கவரி 23%, மாநில அரசின் வாட் வரி 34%. ஜி.எஸ்.டி-க்குள் வந்தால் பெட்ரோல், டீசல் விலை பாதியாகி விடும். இந்தத் தந்திரம் எவ்வளவு பேருக்குத் தெரியும்’ என்ற வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இது உண்மையில் சாத்தியம்... சாத்தியமில்லை என்பதைப் பார்க்கும் முன் இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வரியைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

2017 ஜூன் 16-ம் தேதி கணக்கீட்டின்படி, கச்சா எண்ணெயின் சர்வதேச விலை 47 டாலர். இந்திய மதிப்பில் 3,050 ரூபாய். 1 பீப்பாய் கச்சா எண்ணெய் என்பது 159 லிட்டர். இதன்படி, ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்க்கு ஆகும் செலவு 19.18 ரூபாய். இதன் பிறகு நுழைவு வரி , சுத்திகரிப்புக் கட்டணம், இறக்குமதிச் செலவு மற்றும் இதர இயக்கச் செலவுகள் சேர்த்து லிட்டருக்கு ரூ.5.65 செலவாகிறது.

மார்ஜின், போக்குவரத்து, சரக்கு கட்டணம் சேர்த்து லிட்டருக்கு ரூ.2.68 வரை செலவாகிறது. சுத்திகரித்தப் பிறகு எரிபொருளின் அடிப்படை செலவு லிட்டருக்கு ரூ.27.51. இதனையடுத்து கூடுதலாக, மத்திய அரசால் விதிக்கப்படும் கலால் வரி லிட்டருக்கு ரூ.21.48. வாட் வரிக்கு முன் டீலர்களுக்கு விற்பனை செய்யப்படும் விலை லிட்டருக்கு ரூ.48.99.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்