ஜிஎஸ்டி... எஸ்.எம்.இ துறைக்கு பாதிப்பா?

ஜெ.சரவணன்

ஜி.எஸ்.டி வரி, நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது அமல்படுத்தப்பட்டிருக்கும். ஜி.எஸ்.டி பற்றி முழுமையாகப் புரிந்துகொள்வதற்குள் வந்துவிட்டதே என்று பெரும்பாலானோர் விழிபிதுங்கிக் கிடக்கிறார்கள். முக்கியமாக எஸ்.எம்.இ-கள் என்று அழைக்கப்படும் சிறு, குறு தொழில்முனைவோர்கள். இதுவரையிலும் பெரிய அளவில் எந்தவொரு அரசு நடைமுறைகளுக்குள்ளும் வராமல், சுயமாகத் தங்கள் தொழில்களைச் செய்துவந்த இவர்கள் திடீரென்று ஒரு மிகப்பெரிய மாற்றத்துக்குத் தயாராக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இதுவரையிலும்  கிடைத்த இடத்தில், கிடைத்த அளவில் தொழில் செய்து பிழைத்துக் கொண்டிருந்தவர்களை ஜி.எஸ்.டி நடைமுறைக்குள் கொண்டு வந்ததன் மூலம், இந்த சிறு, குறு தொழில்முனைவோர் பிரிவுக்குள் இருக்கும் பெரும்பாலானோர் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள் என்றுதான் பலரும் கூறிவருகின்றனர். கடைசிவரை ஒருவரிடம் வேலையே செய்துகொண்டிருக்காமல் சொந்தமாகத் தொழில் செய்து, டாட்டாக்களாகவும் அம்பானிகளாகவும் உயர வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் பெரும்பாலான எஸ்.எம்.இ-களின் தொழில் வாழ்க்கை ஆரம்பமாகிறது. ஆனால், அவர்கள் தாங்கள் நினைத்த இலக்கை அடைவதற்குள் எத்தனையோ பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் உண்மை நிலவரம். இப்போது அவர்களுக்கு அரசிடமிருந்தே ஒரு சிக்கல் வந்திருக்கிறது என்றே நினைக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்