தங்கத்தில் முதலீடு... நஷ்டம் தவிர்க்கும் 5 விஷயங்கள்!

சேனா சரவணன்

பிஐஎஸ் எனப்படும் இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS-Bureau of Indian Standards) எனும் அமைப்பு, நகையின் தரத்துக்கு வழங்கும் முத்திரை, ஹால்மார்க் முத்திரை எனப்படும். இந்த முத்திரை, தங்கத்தின் தரத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. இதில் 5 விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

1. பிஐஎஸ் முத்திரை (Logo)

2. தரக் குறியீடு (Purity of Gold - உதாரணமாக, 916 என்றால், 22 கேரட் தூய தங்கம் என்று அர்த்தம்)

3. தரத்தைச் சோதனை செய்த ஆய்வகத்தின் முத்திரை

4.
ஹால்மார்க் முத்திரை பதித்த ஆண்டைக் குறிக்கும் எழுத்து

5. நகை விற்பனையாளர் / கடையின் முத்திரை

நகை எவ்வளவு சின்னதாக இருந்தாலும், மேற்கண்ட 5 விஷயங்களும் இருக்கும். பூதக்கண்ணாடி உதவியுடன் இதையெல்லாம் சரிபார்த்தே, அது ஹால்மார்க் நகையா என்று உறுதி செய்து வாங்க வேண்டும். தங்க நகையின் தரம், எடையில் குறைவு என்பது போன்ற சந்தேகம் அல்லது வேறு ஏதாவது குறைபாடு இருப்பின் கீழ்கண்ட முகவரியில் புகார் செய்யலாம்.

இந்திய தர நிர்ணய ஆணையம் (பிஐஎஸ்), சி.ஐ.டி வளாகம், நான்காவது குறுக்குத் தெரு, தரமணி, சென்னை - 600 113

Tel : 044-22541442, 22541216, 22542519 Fax : 91-044-22541087

Email : sro@bis.gov.in

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick