ஜி.எஸ்.டி... அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்!

ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர், கோயம்புத்தூர்

ஜி.எஸ்.டி குறித்து பலருக்கும் பலவிதமான கேள்விகள், சந்தேகங்கள். இந்தப் புதிய வரி  குறித்து பலருக்கும் உள்ள கேள்விகளும், அதற்கான பதில்களும் இதோ...

ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தபின் சரக்குகள் கொண்டு செல்லும்போது செக்போஸ்ட் இருக்குமா?

‘‘மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் இனி இருக்காது. ஆனால், எந்த இடத்தில் வேண்டுமானாலும் சரக்குகளைக் கொண்டு செல்லும் வாகனங்களைப் பறக்கும் படையானது கண்காணிக்க வாய்ப்புண்டு. சரக்குகளைக் கொண்டு செல்லும் வாகனங்களை ஜி.பி.எஸ் மூலமாகவும் கண்காணிப்பதற்கு வாய்ப்புண்டு.’’

ஜி.எஸ்.டி-யில் கட்டாயத் தணிக்கை உண்டா?

‘‘ஆம். பதிவு செய்த வணிகர் ஒருவருக்கு ஒரு நிதியாண்டில் ரூ.1 கோடிக்கு மேல் மொத்த உற்பத்தி இருந்தால், முறையாக ஆடிட்டரிடம் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும்.’’

இலவசப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி வருமா?

‘‘ஆம். விற்பனையை அதிகரிக்கும் பொருட்டுத் தரப்படும் இலவசப் பொருள்களுக்கும் வரி செலுத்த வேண்டும்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்