ஷேர்லக்: சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகள்! | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்
தோல்வியை வரவேற்போம்!
இன்ஸ்பிரேஷன்: காந்தியிடம் கற்ற பாடம்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/07/2017)

ஷேர்லக்: சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகள்!

ஓவியம்: அரஸ்

சொன்ன நேரத்துக்குச் சரியாக வந்து சேர்ந்தார் ஷேர்லக். ஜி.எஸ்.டி ஸ்பெஷல் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தவரிடம், “அட்டகாசமான கவரேஜ். இந்தப் புதிய வரிவிதிப்புப் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் அனைத்தையும் தந்திருக் கிறீர்கள்’’ என்று நம்மைப் புகழ, நாம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினோம்.

‘‘சி.டி.எஸ்.எல் நிறுவனப் பங்கு சந்தையில் பட்டியலான அன்றே இந்தப் போடு போட்டிருக்கிறதே!’’ என்றோம் வியப்புடன்.

‘‘சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் லிமிடெட் (சி.டி.எஸ்.எல்), ஐ.பி.ஓ வந்தபோது அதன் பங்குகளுக்கு 170 மடங்குக்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. பணம் படைத்தவர்கள்கூட மிகக் குறுகிய காலத்துக்கு வட்டிக்குக் கடன் வாங்கி, இந்தப் பங்கில் முதலீடு செய்திருக்கிறார்கள். கிரே மார்க்கெட்டிலும் இந்தப் பங்குக்கு நல்ல தேவையிருந்தது. ஐ.பி.ஓ-வில் இந்தப் பங்கின் விலை ரூ.149 என நிர்ணயமானது. இது சந்தையில் பட்டியலிடப்படும்போது  பிரீமியத்தில்தான் பட்டியலாகும்  என்கிற எதிர்பார்ப்பு சந்தை முழுக்க நிரம்பியிருந்தது.  அதன்படி இந்தப் பங்கு இன்று சந்தையில் டிரேட் ஆகத் தொடங்கியவுடனே விலை   ஜிவ்வென்று  அதிகரித்தது. இன்றைக்கு மட்டும் ஏறக்குறைய 1.5 கோடி பங்குகள் வர்த்தகம் ஆனது. வர்த்தகத்தின்போது பங்கின் விலை ரூ.268-க்கு அதிகரித்தது.  இது ஏறக்குறைய 80% அதிகரிப்பாகும். இந்த நிறுவனத்தின் புரமோட்டர் பி.எஸ்.இ என்பதால், இதன் பங்குகள் என்எஸ்இ-ல் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன” என்றவருக்கு, சில்லென்று பாதாம் பாலைத் தந்தோம். அதைக் கொஞ்சமாகப் பருகியவர், நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.      

நீங்க எப்படி பீல் பண்றீங்க