பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and Sale in stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),
மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964


இண்டெக்ஸ்

கடந்த வாரத்தில் சந்தையானது இறக்கத்தின் போக்கிலேயே பெரும்பாலும் நிறைவு செய்திருப்பதுடன், முந்தைய வாரத்தைக் காட்டிலும் இறங்கி வர்த்தகமானது. ஆனால், வியாழன் அன்று சற்று ஏற்றமடைந்தது ஆறுதல் அளித்தது. எனினும், அது ஒரு ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் ரோல் ஓவர் செயல்பாட்டை உருவாக்க மட்டுமே நடந்த நிகழ்வாகவே தெரிகிறது. இதனால் வெள்ளி அன்று மீண்டும் இறக்கத்துக்கான மூடில் இருந்தது. வர்த்தக முடிவில் சந்தை சற்று ஏறி முடிந்தது.  

சமீப காலத்தில் குறைவான வரம்புகளில் வர்த்தகமான எக்ஸ்பைரிகளில் ஒன்றுதான் கடந்த ஜூன் மாத எக்ஸ்பைரி ஆகும். மேலும், 2017-ம் ஆண்டில் ஜூன் மாதத்தில்தான் குறைவான ஏற்ற இறக்கம் இருந்தது. இதை ஏற்றத்தின் போக்கு தொடர்வதற்கான அறிகுறி யாகவும் பார்க்கலாம். ஆனால், ஏற்றத்தின் போக்கு ஒருமுறை விழ ஆரம்பித்தால், குறியீடு களில் ஏற்படும் ஏற்ற இறக்கமானது, நம் மனநிறைவைக் குலைக்கும். எனவே, ஜூலையில் நாம் சில பெரிய ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க நேரிடலாம். ஆனாலும், சந்தையின் நிலைப்பாட்டில் காளையின் போக்கு தொடர்வதால், இறக்கங்கள் குறைவாகவே இருக்கும். கடந்த ஐந்து மாதங்களாக இல்லாமல் இருந்த கரடியின் ஆதிக்கம், தற்போது சந்தையில் உருவானால் அதை முதலீட்டுக்கான வாய்ப்பாகப் பார்க்கலாம். ஆனாலும், கரடி தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள சந்தைக்கு நெகட்டிவான செய்திகள் தேவைப்படும். அது நடக்காதபட்சத்தில் அதிகமான இறக்கங்கள் ஏற்படுவது கடினமே.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick