மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 3 - தோல்வியிலிருந்து வெற்றி... கற்றுத்தரும் கலகல கல்லூரிப் பருவம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேல்

ல்லூரியில் பட்டம் பெறுவது  ஓட்டுநர் உரிமம் வாங்குவதைப் போலத்தான். அதற்குப் பின்புதான் நாம் செய்யவேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. வரலாற்று ஆசிரியர் நமக்கு வரலாற்றை மட்டுமே சொல்லித் தருவார். வரலாற்றில் எப்படி இடம்பிடிக்க வேண்டும் என்பதைச் சொல்லித் தர மாட்டார். அதனால் பாடத்தைத் தவிர, கற்றுக்கொள்ள பல விஷயங்கள் கல்லூரியில் இருக்கின்றன. 

நான் கல்லூரியில் படிக்கும்போது வகுப்புகளுக்குப் பெரும்பாலும் செல்லமாட்டேன். எங்கள் துறை மாணவர்களோடு மட்டுமில்லாமல், மற்ற துறை மாணவர்களுடனும், எங்கள் சீனியர் மாணவர்களுடனும் அதிகமாகப் பழகுவேன். இது பல தரப்பட்டவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருந்தது. அதேபோல், கல்லூரியில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அதில் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பேன். யார் எங்கள் கல்லூரியில் பேச வந்தாலும் அவர்களின் பேச்சைக் கேட்கச் செல்வேன்.

அப்படியொரு நாள் எங்கள் கல்லூரியில் உதயமூர்த்தி பேச வந்தார். அப்போது அவரின் பெயரை மட்டுமே கேள்விப்பட்டிருந்தேன். அவர் ஒரு நல்ல பேச்சாளர் என்று தெரியும். அதனால் அவரின் பேச்சைக் கேட்க நண்பர்களை அழைத்துக் கொண்டுச் சென்றேன். அன்று காந்தி ஜெயந்தி என்பதால், அவர் காந்தியைப் பற்றிப் பேசினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick