3D பிரின்டிங்... ஆச்சர்யம் தரும் நாளைய தொழில்நுட்பம்!

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரிஞா.சுதாகர்

ங்கள் காரில் ஏதேனும் ஒரு பாகம் உடைந்து விட்டது; அதை உடனே மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்? கார் ஷோரூமுக்குப் போய் மாற்றுவீர்கள் அல்லது ஆன்லைனிலேயே பொருளை ஆர்டர் செய்து மாற்றுவீர்கள். இதற்குக் குறைந்தது ஒரு நாளாவது காத்திருக்க வேண்டும்.

ஆனால், இனிவரும் காலத்தில் இப்படிக் காத்திருக்க வேண்டிய அவசியமே இருக்காது. உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் 3D பிரின்டிங் கடைக்குச் சென்று, உங்களுக்குத் தேவையான  உதிரிபாகத்தின் டிசைனைத் தந்தாலே போதும். உடனே அதனை பிரின்ட் செய்து (தயாரித்து) உங்கள் கையில் தந்துவிடுவார்கள். கார் உதிரிபாகங்கள்தான் என்றில்லை, சூடாகச் சாப்பிடுகிற பீட்ஸாவில் ஆரம்பித்து, வீடு, ஆகாய விமானம் என எல்லாவற்றையும் 3D பிரின்டிங் மூலம் உடனுக்குடன் செய்துதருகிறார்கள்.

இதெல்லாம் கொஞ்சம்  ‘டூ மச்’சாக இல்லை என்கிறீர்களா? இந்தக் கட்டுரையை நீங்கள் படித்து முடிக்கிற சமயத்தில், 3D பிரின்டிங் என்பது கப்ஸா இல்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்