மணி மேனேஜ்மென்ட்! - 23 - டேர்ம் பாலிசி... முதலீட்டுக் காவலன்! | The Money Management - Nanayam Vikatan | நாணயம் விகடன்

மணி மேனேஜ்மென்ட்! - 23 - டேர்ம் பாலிசி... முதலீட்டுக் காவலன்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்...சி.சரவணன்

ந்த மணி மேனேஜ்மென்ட் தொடரின், முந்தைய அத்தியாயங்களில் முதலீட்டு வகைகள், யாருக்கு எந்த முதலீடு என்பதைப் பார்த்தோம். குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றுக்கான முதலீட்டை ஆரம்பித்து, சில ஆண்டுகளாகிவிட்டது. இந்த நிலையில்,  வருமானம் ஈட்டும் குடும்பத் தலைவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால், அவரை நம்பி இருக்கும் மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும், அதற்குக் குடும்பத் தலைவர் என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்விகள் முக்கியமானவை. 

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என எங்களுக்குப் புரிந்துவிட்டது என உங்களில் பலர் நினைப்பது எனக்குத் தெரிந்துவிட்டது. ஆம்,  குடும்பத் தலைவருக்கு ஆயுள் காப்பீடு (லைஃப் இன்ஷூரன்ஸ்) எடுத்திருப்பதுதான். நம் நாட்டில் வருமானம் ஈட்டும் குடும்பத் தலைவரின் பெயரில் பெரும்பாலும் ஆயுள் காப்பீடு எடுக்கப்படாமலே  இருக்கிறது. அப்படியே பாலிசி இருந்தாலும், அது போதிய தொகைக்கு எடுக்கப்படாமலே  இருக்கும். ஆயுள் காப்பீட்டில் டேர்ம் பிளான், எண்டோவ்மென்ட் பிளான், மணி பேக் பிளான், யூலிப் பாலிசி என  பல வகைகள் உள்ளன.

இதில், டேர்ம் பிளான்தான் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் தரக் கூடியது. அந்த வகையில், இதர இன்ஷூரன்ஸ் பாலிசிகளைத் தவிர்த்துவிடலாம். லைஃப் இன்ஷூரன்ஸை முதலீட்டாகப் பார்க்க வேண்டாம் என்பதால், டேர்ம் பிளானைத் தவிர, இதர பாலிசிகளைத் தவிர்ப்பதே நல்லது.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick