கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

ந்த வாரம் தங்கம், வெள்ளி எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனத் தலைவர் தி.ரா.அருள்ராஜன் விளக்குகிறார்.

 தங்கம்

‘‘தங்கம் தொடர்ந்து இறங்கி வருகிறது. ஆனால், கடந்த வாரம் ஒரு பக்கவாட்டு நகர்வுக்குச் சென்றுள்ளது. நாம் சென்ற வாரம் சொன்னது போல, தங்கம் வலுவான இறக்கத்துக்குப் பிறகு, 28,050 என்ற எல்லையை ஆதரவாக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த முயற்சி தொடரும்போது, ஒரு புல்பேக் ரேலி வரலாம். இந்த புல்பேக் ரேலியின் இலக்குகள் 28,450 மற்றும் 28,600 ஆகும். ஏற்கெனவே 28,600 என்பது ஹெட் அண்ட் ஷோல்டரின் நெக்லைனாக உள்ளது. இந்த எல்லை தற்போது வலிமையான தடைநிலையாக மாறலாம்.

இந்த விளக்கம் இந்த வாரமும் பொருந்தும். ஏனெனில் கடந்த ஒரு வாரம், தங்கம் நாம் சொன்ன 28,050 புள்ளிக்கும் 27,950 என்ற புள்ளிக்கும் இடையே வலுவான ஒரு ஆதரவை எடுத்துக் கொண்டு இருக்கிறது. இந்த ஆதரவு உடைக்கப் படாதவரை ஒரு புல்பேக் ரேலிக்கு முயற்சி நடக்கலாம்.

தற்போது உடனடித் தடைநிலையாக 28,250 உள்ளது. இதை உடைத்து மேலே ஏறினால், நாம் மேலே சொன்ன இலக்குகளைப் படிப்படியாக அடையலாம்.

கீழே 27,950 என்ற மிக முக்கியமான ஆதரவு உடைக்கப்பட்டால், அடுத்த கட்ட வலிமையான இறக்கம் நிகழலாம். இந்த இறக்கத்தை அடுத்து 27,600, 27,250 மற்றும் 26,950 என்ற எல்லைகளைத் தொடலாம்.

 வெள்ளி

வெள்ளி, சென்ற வாரம் தங்கத்தை போலவே நகர்ந்துள்ளது. ஆனால், தங்கத்தைவிட சற்றே அதிக வலுவினைக் காட்டி உள்ளது. ஆனாலும் ஏற முடியவில்லை என்பதுதான் நிஜம்.வெள்ளி, தங்கம் எப்படி பக்கவாட்டில் நகர்ந்ததோ, அதைப் போன்றே தொடர்ந்து சென்ற வாரம் முழுவதும் கீழே 37,750 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 38,350 என்ற எல்லையை தடைநிலையாகவும் கொண்டு இயங்கியது.

இது போன்ற பக்கவாட்டு நகர்வானது எந்தப் பக்கம் உடைகிறதோ, அந்தப் பக்கம் மிகப் பெரிய நகர்வைக் கொடுக்கும். எனவே, பெரிய வாய்ப்பு ஒன்று காத்திருக்கிறது. இந்த எல்லைகள் உடையும்போது, டிரேடில் இறங்கினால், குறைவான ரிஸ்க்கில் அதிக ரிவார்ட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அது ஒரு புல்பேக் ரேலியாகவும் இருக்கலாம். அப்போது மேலே 39,000 மற்றும் 39,600 என்ற இலக்கை அடையாளம். அதுவே கீழ் எல்லையான 37,750 ஐ உடைத்தால், ஒரு பியரிஷ் ஃபிளாக்  (Bearish Flag) அமைப்பைத் தோற்றுவித்து, மிகப் பெரிய இறக்கத்துக்கு வழிவகுக்கலாம்.’’ 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick