டிராவல் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்? | Travel insurance is secure to life - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2017)

டிராவல் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்?

சோ.கார்த்திகேயன்

ம்மில் பலர், உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை சுற்றுலா செல்கிறோம். அப்படிச் செல்லும்போது எல்லாம் சரியாக நடந்துவிட்டால், எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சுற்றுலா செல்லும் இடங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், நாம் நிம்மதி இழப்போம். இதனால் சுற்றுலாவுக்குச் சென்ற நோக்கமே பாழாகிவிடும். இது மாதிரியான அசம்பாவிதங்களிலிருந்து நம்மைக் காக்க உதவுபவைதான் ‘டிராவல் இன்ஷூரன்ஸ்’. சுற்றுலா செல்லும் முன்பு, இந்த ‘டிராவல் இன்ஷூரன்ஸ்’ இல்லாமல் போவது மகா தவறு. 

‘டிராவல் இன்ஷூரன்ஸ்’ பாலிசியானது குறைந்தபட்சம் ஏழு நாள்கள் முதல் தரப்படுகிறது. ஆறு மாதக் குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை இந்த இன்ஷூரன்ஸை எடுத்துக்கொள்ளலாம். இந்த பாலிசியை, நீங்கள் சுற்றுலாவுக்குக் கிளம்பும் தினத்தன்றுகூட எடுக்கலாம். நீங்கள் விமானத்தில் ஏறி வெளிநாட்டுக்குச் சென்று, மீண்டும் இந்திய விமான நிலையத்துக்குள் வந்து இறங்கும் வரை இந்த பாலிசி மூலம் கவரேஜ் கிடைக்கும். இந்த இன்ஷூரன்ஸில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இன்ஷூரன்ஸ் நிபுணரும், வெல்த் லேடர் நிறுவனத்தின் நிறுவனருமான ஸ்ரீதரனிடம் கேட்டோம்.