ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம்... எப்போது தயாராகும் தமிழகம்? | Real estate regulation act Tamil nadu - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2017)

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம்... எப்போது தயாராகும் தமிழகம்?

பா.பிரவீன் குமார்

னைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த, சுருக்கமாக ‘ரெரா’ (RERA) எனச் சொல்லப்படும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் (Real Estate Regulation Act), வெற்றிகரமாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமலாகியிருக்கிறது. தமிழக மக்களுக்கு வழக்கம்போல் ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது. இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த எந்த ஒரு முயற்சியையும் தமிழக அரசு எடுத்ததுபோலத் தெரியவில்லை. தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறை இன்று மிக மோசமான நிலையில் உள்ளது. தாங்கள் ஏமாற்றப்பட்டதாக மக்கள் தரப்பிலிருந்து வரும் புகார்களைச் சந்திக்கும் நிலையில்தான் ரியல் எஸ்டேட் துறை இருக்கிறது. ஏதாவது பொய் சொல்லி விற்பனை செய்வது, கொடுத்த உறுதிமொழியைப் பூர்த்தி செய்யாதது, ஒப்படைப்பதாக உறுதி அளித்த காலத்தைத் தாண்டியும் கட்டுமானத்தை முடிக்காதது என்று ரியல் எஸ்டேட் துறையில் பல சிக்கல்கள். இதைத் தவிர்க்க, ‘ஒளிவுமறைவற்ற தன்மை வேண்டும்’ என்று பலரும் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டத்தை, மத்திய அரசு படாத பாடுபட்டு நிறைவேற்றியது. ஒவ்வொரு மாநில அரசும் இந்தச் சட்டத்துக்கு உட்பட்டு, 2017 மே 1-ம் தேதி மாநில அளவிலான ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 13 மாநிலங்கள்தான் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்திருக்கின்றன.