ரெரா சட்டம்: ரியல் எஸ்டேட் பங்குகளில் முதலீடு செய்யலாமா?

ஜெ.சரவணன்

டந்த  சில ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடையாமல் நெருக்கடிக்குள்ளானது. நாடு முழுவதும் உள்ள கட்டுமான நிறுவனங்கள், தாங்கள் கட்டிமுடித்த வீடுகளை விற்க முடியாமல் திண்டாடி வந்தன. வீடு, மனை மற்றும் நிலங்களுக்கு டிமாண்ட் இல்லாத நிலையிலும்கூட, அவற்றின் விலை பெரிதாகக் குறையவில்லை என்பது நுகர்வோர்களிடையே பெரும் குறையாகப் பேசப்பட்டு வந்தது. இந்தக்  காரணத்தால் சொத்து வாங்க நினைத்தவர்களும் வாங்குவதைத் தவிர்த்து வந்தார்கள்.

இந்த நிலையில், கடந்த ஒரு வருடமாக ரியல் எஸ்டேட் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது. அதற்காக ‘ரெரா’ (RERA) சட்டம் என்ற ரியல் எஸ்டேட் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. மேலும், எல்லோருக்கும் வீடு என்ற திட்டத்தையும் அரசு தொடங்கி இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick