காலியாகக் கிடக்கும் ஒரு கோடி வீடுகள்! காரணம் என்ன? | one crores House Is Available - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2017)

காலியாகக் கிடக்கும் ஒரு கோடி வீடுகள்! காரணம் என்ன?

பா.பிரவீன் குமார்

கர்ப்புறங்களில் மக்கள் வசிக்கப் போதுமான வீடுகள் இல்லை என்கிற புலம்பல் ஒரு பக்கம்; ஆனால், விளைநிலங்களை  எல்லாம் அழித்துப் புதிது புதிதாகக் கட்டிய பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பல ஆயிரம் காலியாக இருக்கின்றன என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். 

2011-ம் ஆண்டு மேற்கொள்ளப் பட்ட குடியிருப்பு தொடர்பான சென்செஸ் புள்ளிவிவரக் கணக்கெடுப்பின்படி, இந்தியா முழுக்க 9 கோடி குடியிருப்புகள் இருப்பதாகவும், இதில், 1.1 கோடி அளவுக்கு வீடுகள் காலியாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இதில், நகர்ப்புறங்களில் 12% அளவுக்கு வீடுகள் காலியாக இருக்கின்றன.

இது ஒருபக்கமிருக்க, ஜவஹர்லால் நேரு நகர்ப்புறப் புனரமைப்புத் திட்டம், ராஜிவ் அவாஸ் யோஜனா, பிரதம மந்திரி அவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) ஆகிய திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட வீடுகளில், குறிப்பிடத்தகுந்த அளவு காலியாகவே கிடக்கின்றன.   

[X] Close

[X] Close