வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்! | 10 Common Tax Mistakes to Avoid - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2017)

வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர், கோயம்புத்தூர்

வறுதலாகத் தாக்கல் செய்யப்படும் வருமான வரிப் படிவங்கள், வரி செலுத்துபவரை பல இன்னல்களுக்கு ஆளாக்குகின்றன. மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன், வட்டி, அபராதம் எனக் கூடுதல் செலவுகளையும் இழுத்துவிடுகிறது.  ஆகவே, வரி செலுத்துபவர்கள்  வரிக் கணக்கைத்  தாக்கல் செய்யும்போது அதிகக் கவனத்தோடு இருக்கும்பட்சத்தில், சிறிய தவற்றையும்  தவிர்க்க முடியும். வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது தவிர்க்க வேண்டிய 10 தவறுகள் என்னென்ன?