கம்பெனி ஸ்கேனிங்

கிரீவ்ஸ் காட்டன் லிமிடெட்!(NSE SYMBOL: GREAVESCOT)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் கிரீவ்ஸ் காட்டன் லிமிடெட். 1859-ம் ஆண்டில் நிறுவப்பட்டு,  பல்வேறு விதமான டீசல்/பெட்ரோல் இன்ஜின்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் பம்ப்செட்கள் போன்றவற்றை முதன்மையாகவும், ஏனைய பல்வேறு வகையான இன்ஜினீயரிங் துறைக்கான தயாரிப்புகளையும் (Diversified) உற்பத்தி செய்து வரும் இன்ஜினீயரிங் நிறுவனம் இது.

வியாபாரப் பிரிவுகள் என்று பார்த்தால் விவசாயத்துக்கான உபகரணங்கள், ஆட்டோமொபைல்களுக்கான இன்ஜின்கள்,  துணை மின் உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு உதவும் இன்ஜின்கள் என்ற நான்கு பெரும் தொழிற்பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

சமீபத்திய வருடங்களில் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம், தன்னை ஓர் உலகளாவிய தொழில் செய்யும் நிறுவனமாக மாற்றிக்கொள்வதில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதன் மூலம், தற்போது அதனுடைய தயாரிப்புகளை பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருகிறது. 

மேலும், அயல்நாடுகளில் விற்பனை செய்வதற்குத் தேவையான பொருள்களைத் தயாரிப்பதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், டான்ஸானியா மற்றும் சீனாவில் தன்னுடைய உற்பத்தி வசதிகளை நிறுவியுள்ளது கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்