ஏற்றத்தில் பிட்காயின்... என்ன காரணம்? | Bitcoin market value is high - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2017)

ஏற்றத்தில் பிட்காயின்... என்ன காரணம்?

ராகினி ஆத்மவெண்டி மு.

‘பிட்காயின்’ என்னும் கரன்சியின் மதிப்பு, எப்போதும் இல்லாத அளவுக்கு பலமடங்கு ஏற்றம் கண்டுள்ளது. உலகச் சந்தையில் இந்த விர்ச்சுவல் பணத்தின் மதிப்பு முதல்முறையாக 1800 டாலர்களாக ஏற்றம் கண்டுள்ளது. சங்கேதக்  குறியீடுகளைப் பயன்படுத்தி மின்னணு முறையில் இயங்கிவரும், கண்ணுக்குத் தெரியாத இந்த கம்ப்யூட்டர் பணம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என்கிற நம்பிக்கை பரவலாக உள்ளது. இதனாலேயே பலரது கவனத்தையும் இந்த பிட்காயின் பெற்று வருகிறது.