நிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல் செட்டப்பில் பெரிய அளவில் மாற்றமில்லை!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

டெக்னிக்கல் ரெக்கவரியை எதிர்பார்த்தே வியாபாரம் செய்யவேண்டியிருக்கும் என்றும், நல்லதொரு காரணம் கிடைத்தால் 9036 லெவல்கள் வரை ஒரு இறக்கம் வந்து மீண்டும் வெகுவிரைவாக மேல் நோக்கி வந்துவிடும் வாய்ப்பு சந்தையில் உருவாகிக்கொண்டிருக்கிறது என்றும், டிரேடிங் முடிவுகள் எடுக்க முடியாத டிரேடர்கள் டிரேடிங்கைத் தவிர்ப்பதே நல்லது என்றும், ரிவர்சல்கள் அந்த அளவுக்கு வேகத்தில் நடந்துவிடக்கூடும் என்றும் சொல்லியிருந்தோம்.

நான்கு நாட்கள் ஏற்றத்திலும், ஒரு நாள் இறக்கத்திலும் முடிவடைந்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 115 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது. பெரிய அளவிலான முக்கியப் பொருளாதார டேட்டாக்கள் எதுவும் வெளிவராத வாரத்தை எதிர்கொள்ளப்போகிறோம். செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்.

டெக்னிக்கலாக சந்தையின் போக்கு பெரிய அளவில் மாறுதல்கள் எதையும் சந்தித்துவிடவில்லை என்றாலும், அடிக்கடி சிறியதொரு வீக்னெஸ் வந்துபோகிறது. செய்திகள் நெகட்டிவாக இருக்கும்பட்சத்தில் நல்லதொரு வீக்னெஸ் வந்துவிடு வதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது என்று சொல்லும் அளவுக்கே சூழல் இருக்கிறது. அவ்வபோது சந்தையில் வரும் வீக்னெஸும் அதைத் ்தொடர்ந்த வேகமான ஏற்றமும் இதையே காட்டுவதாக இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்