மணி மேனேஜ்மென்ட்! - 24 - மொத்தக் குடும்பத்துக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்...சி.சரவணன்

முதலீட்டைப் பாதுகாக்கும் லைஃப் இன்ஷூரன்ஸ் பற்றிக் கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மருத்துவக் காப்பீடு என்கிற ஹெல்த் இன்ஷூரன்ஸ் பற்றி பார்ப்போம்.

  ஏன் ஹெல்த் பாலிசி?

ஆயுள் காப்பீட்டைப் பொறுத்தவரை, வருமானம் ஈட்டும் நபரின் பெயரில்தான் எடுக்க வேண்டும் என ஏற்கெனவே சொன்னோம். அதே நேரத்தில், ஹெல்த் இன்ஷூரன்ஸ் அப்படியல்ல. குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுப் பாலிசி எடுப்பது அவசியம். காரணம், குடும்ப உறுப்பினர்கள் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானலும் உடல்நலமில்லாமல் போகக்கூடிய வாய்ப்புண்டு.
 
ஏன் மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுக்க வேண்டும் என்கிற கேள்வி நமக்கு எழுவது இயல்பே. இதற்கான பதில், அதிகரித்துவரும் மருத்துவமனைச் செலவுகள்தான். மருத்துவச் செலவுக்கான பணவீக்கம் இந்தியாவில் சுமார் 15 சதவிகிதமாக இருக்கிறது. சாதாரணமாக விபத்தில் காயம்பட்டு, மருத்துவமனையில் ஒரு வார காலம் அனுமதிக்கப்பட்டால், குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் காலியாகிவிடும். இதுவே, மாரடைப்பு, அதற்கு அறுவை சிகிச்சை என்றால், சில லட்சம் ரூபாயாவது செலவாவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இந்த லட்சங்கள் என்பது ஒரு குடும்பத்தின் பல ஆண்டு சேமிப்பு மற்றும் முதலீடாகும். இந்த இழப்பைத் தவிர்க்கத்தான், சில ஆயிரங்கள் பிரீமியம் கட்டி, மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுப்பது அவசியம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்