வீட்டை மேம்படுத்த பத்திரம் தராமல் கடன் கிடைக்குமா?

கேள்வி-பதில்

? வீட்டைப் புனரமைக்க ரூ.10 லட்சம் கடன் வாங்கலாம் என நினைக்கிறேன். வங்கியில் என்னுடைய வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைக்காமல் கடன் வாங்க முடியுமா?

மணிகண்டன், ஈரோடு
பிரபாகர பாபு, முன்னாள் துணை மண்டல மேலாளர், பாங்க் ஆஃப் இந்தியா


“வீட்டுப் புனரமைப்புக்கு அந்த வீட்டின் பத்திரத்தை  வங்கியில் அடமானமாக வைத்து வீட்டுக் கடன் வாங்குவது நடைமுறையில் இருக்கிறது. இது வீட்டை மேம்படுத்தும் வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் வருவதால், கடன் பெற்றதுமே அந்த அடமானத்தைப் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டி வரும். எனவே, வீட்டின் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைக்காமல் கடன் வாங்க முடியாது.”

?கடந்த இரண்டு ஆண்டுகளாக மிட்கேப் ஃபண்ட் ஒன்றில் முதலீடு செய்துவருகிறேன். எனக்கு இதில் திருப்தியில்லை. என் முதலீட்டை ஆர்பிட்ரேஜ் ஃபண்டுக்கு மாற்றிக் கொள்ளலாமா?

சந்தோஷ், கரூர்
பாரதிதாசன், நிதி ஆலோசகர்


“நீங்கள் முதலீடு செய்திருக்கும் மிட் கேப் ஃபண்ட் ஆண்டுக்கு என்ன வருமானம் தருகிறது என்று நீங்கள் சொல்லவில்லை. பொதுவாக, நீண்ட கால இலக்கில்  முதலீடு செய்ய நினைத்தால், மிட்கேப் ஃபண்டில் எஸ்ஐபி மூலம் தாராளமாக முதலீட்டை மேற்கொள்ளலாம். மிட்கேப் ஃபண்டுகள் சராசரியாக ஆண்டுக்கு 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானத்தை வழங்கும். ஆனால், உங்களுடைய இலக்கு குறுகிய காலம் எனில், மிட்கேப் ஃபண்டில் இருந்து வெளியேறி, ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் அல்லது பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இவை ஆண்டுக்கு 8% வரை வருமானத்தைத் தரக்கூடியவை.’’

? எனக்கு 35 வயதாகிறது. என் குழந்தையின் கல்விக்காக எஸ்ஐபி மேக்னம் மிட்கேப் ஃபண்ட்- ரெகுலர் பிளான் - ரூ.2,000, டிஎஸ்பி பிளாக்ராக் மைக்ரோ கேப் ஃபண்ட் - ரூ.1,000, ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் - ரூ.2,000, ஹெச்டிஎஃப்சி டாப் 200 - ரூ.2,000, ரிலையன்ஸ் டாக்ஸ் சேவர் (இஎல்எஸ்எஸ்) ஃபண்ட் - ரூ.2,000, ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மல்டி கேப் ஃபண்ட் - ரூ.2,000 என கடந்த ஆண்டிலிருந்து மாதந்தோறும் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்து வருகிறேன். அடுத்த பத்து ஆண்டு காலத்தில் ரூ.35 லட்சம் என்பது என் இலக்கு. இது சரியான அணுகுமுறையா?

செந்தில், காஞ்சிபுரம்
ச.ராமலிங்கம், நிதி ஆலோசகர்


“இளம் வயதில் உங்களுடைய குழந்தைகளின் கல்விக்காக பங்குச் சந்தை சார்ந்த  சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை, குறிப்பாக மல்டிகேப், மைக்ரோகேப், மிட்கேப், டைவர்சிஃபைடு ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்து, எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது பாராட்டத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick